இங்கிலாந்து கலவரம்: 400 நபர்கள் கைது!

Published On:

| By Minnambalam Login1

far right riot england

கடந்த ஒருவாரமாக இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் வலதுசாரி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில், இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். far right riot england

கடந்த ஜூலை 29-ஆம் தேதி, இங்கிலாந்தின் சௌத்போர்ட் நகரத்தில், பாப் பாடகர் டெய்லர் ஸ்விப்ட் ‘தீம்’மில் குழந்தைகளுக்கான நடன வகுப்பு நடத்தப்பட்டது. இந்த வகுப்பிற்குள் கத்தியுடன் புகுந்த மர்ம நபர் ஒருவர்,  சரமாரியாக எல்லோரையும் குத்த ஆரம்பித்தார்.

மொத்தம் 11 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள்  கத்திகுத்திற்கு ஆளானார்கள். இவர்களில் பீபி கிங்க்(6 வயது), எல்சி டாட்(7 வயது) மற்றும் ஆலிஸ் டா சில்வா( 9 வயது) என்ற  மூன்று குழந்தைகள் பலியானார்கள். தாக்குதலுக்கு உண்டான மற்றவர்களில் 5 குழந்தைகள் மற்றும் இரண்டு பெரியவர்கள் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளனர். far right riot england

இந்த தாக்குதலை நடத்திய பேங்க்ஸ் நகரத்தைச் சேர்ந்த ஆக்ஸெல் ரூடகுபானா என்ற 17 வயது வாலிபரை காவல்துறை கைது பண்ணுவதற்குள் சமூக வலைத்தளங்களில், தாக்கிய நபரைப் பற்றி வதந்திகள் பரவத் தொடங்கின. அதில், தாக்கிய நபர் இங்கிலாந்திற்குப் படகு மூலம் அகதியாக வந்த முஸ்லிம் என்று குறிப்பிட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இதனால் ஆகஸ்ட் 30-ஆம் தேதி சௌத்போர்ட்டில் உள்ள பள்ளிவாசல்களைக் கலவரக்காரர்கள் தாக்கத் தொடங்கினர். தடுக்க வந்த காவலர்களையும் தாக்கி, கடைகளைச் சூறையாடினர். கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவரம் பிரிஸ்ட்ல், லண்டன், மான்ச்செஸ்டர், லிவர்பூல் போன்ற நகரங்களுக்கும் பரவியது.

இதற்கிடையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த இங்கிலாந்து பிரதமர் கெர் ஸ்டார்மரை பார்த்து, ஒருவர் “இன்னும் எத்தனை பெயர்கள்? என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் கலவரக்காரர்கள் சௌத் யார்க்ஷைர், டேம்வர்த் போன்ற நகரங்களில் இங்கிலாந்திற்குத் தஞ்சம் கேட்டு வந்த நபர்கள் தங்கியிருக்கும் விடுதிகளின் கண்ணாடியை உடைத்து, தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர்.

இந்த சம்பவத்தால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளதாக டெய்லர் ஸ்விப்ட் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 

இது குறித்துப் பேசிய காவல்துறை அமைச்சர் டயான ஜான்சன், “நேற்று(ஆகஸ்ட்7 ) முதல் இந்தக் கலவரம்  படிப் படியாகக் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. கலவரத்தில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட வலதுசாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வீதியில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்ல, ஆன்லைனில் கலவரம் குறித்து வதந்தி பரப்புவர்களும் கைது செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

வினேஷ் போகத் தகுதிநீக்கம் : எதிர்க்கட்சிகள் அமளி… அவை தலைவர் வெளிநடப்பு!

தள்ளிப்போகும் ‘இன்டர்ஸ்டெல்லார்’ ரீ-ரிலிஸ்!

“உங்கள் மதிப்பு வெற்றிகளால் அளவிடப்படுவதில்லை” : வினேஷ் போகத்துக்கு நயன்தாரா ஆலியா பட் ஆறுதல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel