�
நடப்பு ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்புவது, 23 சதவிகித அளவுக்குக் குறையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொற்று நோய் பரவல் காரணமாக உலகப் பொருளாதாரம் மந்த நிலையை எட்டியுள்ளதை அடுத்து, இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்புவது, 23 சதவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் 8,300 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. நடப்பு ஆண்டில் 6,400 கோடி டாலராக குறையும். உலகளவைப் பொறுத்தவரை இது 20 சதவிகிதமாகச் சரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
கணிக்கப்பட்டுள்ள இந்தச் சரிவு இதுவரை சரித்திரத்தில் இல்லாத அளவாகும். இந்த அளவுக்குச் சரிவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வேலை மற்றும் ஊதியத்தில் இழப்பு ஏற்படும் என்பதுதான். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை மற்றும் ஊதிய இழப்பை அதிகம் எதிர்கொள்வார்கள். வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், தங்கள் வீட்டுக்குப் பணம் அனுப்புவதை நோய் தொற்று மிகவும் கடினமானதாக மாற்றியுள்ளது.
தாயகத்துக்குப் பணம் அனுப்புவது, ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 27.5 சதவிகிதம் அளவுக்குச் சரிவைக் காணும். தெற்கு ஆசியாவை பொறுத்தவரை இது 22.1 சதவிகிதமாகவும், கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளைப் பொறுத்தவரை 13 சதவிகிதமாகவும் இருக்கும். பாகிஸ்தானை பொறுத்தவரை தாயகத்துக்குப் பணம் அனுப்புவது, 23 சதவிகிதமாகச் சரிவு காணும் எனக் கணிக்கப்பட்டுள்ளது” என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
**-ராஜ்**�,”