செப்டம்பருக்குள் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சு.

தமிழகம்

செப்டம்பர் மாதத்திற்குள் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களைத் தேடி மருத்துவம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில்  நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதியில் பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தை அமைச்சர் மா.சுப்ரமணியன் வழங்கினார். அவருடன் சென்னை மேயர் பிரியா மற்றும் துணை மேயர்  மகேஷ் குமார்,  சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2-ம் ஆண்டுவிழா

அதன்பின் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்வர் துவங்கி வைத்தார். அரசு மருத்துவம் அனைவருக்கும் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் துவங்கியதே இந்த திட்டம். அந்த திட்டம் 2 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த திட்டத்தை பொறுத்தவரை கடந்த 1 ஆண்டில் தமிழகத்தில், 74.92% பேருக்கு பரிசோதனையும், 83,23,723 பேருக்கு மருந்து பெட்டகம் வழங்கப்பட்டு உள்ளது.  1,56,57,595 மருந்து பெட்டிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை  83,73,724 மருந்துகள் விநியோகம் ஆகி உள்ளது. இது மட்டுமின்றி மருந்து காலியாகி விட்ட நபருக்கு ரிபீட்டட் சேவை முறையில் வழக்கப்பட்டு உள்ளது.

2000 செவிலியர்கள் நியமனம்

நோயாளிகளின் உடம்பில் உள்ள குறைபாடுகள் பற்றி அறிந்து கொள்ள சுகாதார குடும்ப புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது தமிழகம் முழுவதும் மருத்துவ குடும்ப அட்டை வழங்க இருக்கிறோம். இந்த திட்டத்தை பொறுத்தவரை சென்னையில் கால தாமதம் ஆகினாலும் 15,75,400 பேர் பரிசோதனையில் உட்படுத்த உள்ளனர். இந்த திட்டத்தின் பயன் முக்கியமாக மலைவாழ் மக்களுக்கு முதலில் கொண்டு செல்லும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டது. கிராமப்புற மக்களின் மருத்துவம் பார்க்க இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்கள் மேல் உள்ளனர். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்த திட்டத்திற்காக நியமிக்க உள்ளோம்” என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

விரைவில் முன்னேற்றம்

மேலும் நீட் தேர்வை பற்றி பேசிய அமைச்சர் , நீட் விலக்கு பெறுவதில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தான் தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். நீட் விலக்கில் மத்திய அரசு கேட்ட 16 கேள்விகளுக்கு சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்து பதில் அனுப்பி உள்ளோம். நீட் விலக்கில் முன்னேற்றம் வரும் என்று எதிர்பார்ப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

செவிலியர்களுக்கு பணி

மேலும் சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் செவிலியர்கள் குறைபாடு இருந்து வருவது உண்மை தான். தற்போது இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்காணல்கள் சென்று கொண்டிருக்கின்றது. வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மருத்துவமனைகளில் காலி பணியிடங்களில் செவிலியர்கள் அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி அளித்திருக்கிறார்.

-கலை.ரா

காதல் முக்காட்டை கலைத்த ஆற்று வெள்ளம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.