ADVERTISEMENT

ஓபிஎஸ் பயன்படுத்திய அந்த வார்த்தை! என்ன நடக்குது அதிமுகவில்?

Published On:

| By Aara

word used by ops what happen aiadmk

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் அதிமுக என்ற கட்சி பெயரையோ அதன் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரபூர்வ அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் தடை வாங்கப்பட்டிருக்கிறது. word used by ops what happen aiadmk

இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இன்று ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில்,  ”அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.  அரசியல் வட்டாரங்களில் இது கவனிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

நீதிமன்ற உத்தரவுக்கு பிறகு ஓ பன்னீர்செல்வம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரை தான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்.

இந்த உரிமை மீட்பு குழு லெட்டர் ஹெட்டில் தான், அவரது அறிக்கைகளும் அவர் வெளியிடும் நிர்வாக நியமன அறிவிப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ADVERTISEMENT

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 2)  எம்புரான் திரைப்படத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில உறவை கெடுக்கும் வகையில் உள்ள காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்க கோரி ஓ பன்னீர்செல்வம் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். word used by OPS! What happen aiadmk

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற லெட்டர் ஹெட்டில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.  அதன் நிறைவு பத்தியில், “எம்புரான் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டுக்கு எதிரான காட்சிகளை தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் உறவுகளை பாதிக்கும் காட்சிகளை நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்’ என்று முடித்துள்ளார். word used by ops what happen aiadmk

ADVERTISEMENT
word used by ops what happen aiadmk

இதற்கு முன்பு அவர் வெளியிட்ட அறிக்கைகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரையே பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் இப்போது திடீரென அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என ஓ பன்னீர்செல்வம் சொல்லி இருப்பது தற்போது அரசியல் சூழலில் கவனிக்க தகுந்ததாக உள்ளது.

அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் முதல் உள்துறை அமைச்சர் அமித் ஷா வரை பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கும் நிலையில்… ஓபிஎஸ் சின் இந்த திடீர் மூவ் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. word used by ops what happen aiadmk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share