நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 22) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.
தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அறிவிப்புகள் :
- ஆளுநர் நியமன முறை குறித்து மாநில அரசின் கருத்துகளைக் கேட்க வேண்டும்.
- சென்னையில் உச்சநீதிமன்றக் கிளையை அமைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
- குற்ற வழக்குச் சட்டங்களின் பெயர் மாற்றத்தைக் கைவிட வலியுறுத்தல்
- முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்
- மருத்துவ படிப்புக்கான நீட் தேர்விற்குப் பதிலாக மாற்றுத் தேர்வு முறை
- மகளிர் உரிமைத் தொகை ரூ.3,000-ஆக வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
- வருமான வரியில் பாதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
- நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் இடம்பெற வேண்டும்.
- சிறுவாணி அணையைத் தூர்வாரி சீரமைக்க திட்டம்
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தைச் சென்னையில் நடத்த வேண்டும்
- 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.450 வழங்க நடவடிக்கை
- மத்திய அரசின் நிதிச் சுமையைக் குறைக்க நிதிப் பகிர்வை 75:25 என மாற்றி அமைக்க வேண்டும்
- இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல்
- பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும்
- ரயில் பயண சலுகையை மீண்டும் வழங்க வலியுறுத்தப்படும்
- பாலாற்றில் தடுப்பணை கட்டும் முயற்சி தடுத்து நிறுத்தப்படும்
- நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும்
- நதிகள் இணைப்பு திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தல்
- கச்சத்தீவு மீட்பு, நடந்தாய் வாழி காவேரி திட்டம்
- மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான கோரிக்கை
- கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தப்படும்
- தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை
- தமிழ்நாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம் அமைக்கப்படும்.
- சிலிண்டர் விலையைக் குறைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்
இது போன்று 133 வாக்குறுதிகள் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
இந்து