பெண்களை பின் தொடர்ந்தால்… அமலுக்கு வந்த புதிய சட்டம்!

Published On:

| By Minnambalam

Women Safety Amendment Act

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 30 ஆண்டுகளாக திருத்தப்படாத பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. Women Safety Amendment Act

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த 2023ல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 4,470 பேர் மீது போக்சோ வழக்கு பதிவாகியுள்ளது. அது கடந்த ஆண்டு (2024) 6,920 ஆக உயர்ந்ததாக தரவுகள் கூறுகின்றன.

இதுமட்டுமின்றி பின் தொடருதல்,  இணைய வழி குற்றங்கள் என ஏதேனும் ஒருவகையில் பெண்கள் தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக அரசு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டத்தை கடந்த ஜனவரி மாதம் திருத்தியது.

அதன்படி, இந்தியாவிலேயே முதல் முறையாக பெண்களுக்கு எதிராக குற்றம் சாட்டபட்டவர் மின்னணு வழிமுறைகள் உட்பட எந்த வடிவத்திலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட பெண்களுடன் அல்லது அவர்களை சார்ந்தவர்களுடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதை தேவையான கால அளவில்  தடுக்கும் வகையில் சட்டம் திருத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதை மீறுபவர் அபராதத்துடன் தண்டிக்கப்படுவார்கள் என புதிய சட்ட திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை வடக்கு மண்டல போலீசார் தீவிரமாக செயல்படுத்தியிருக்கின்றனர்.

வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில், சரக டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பி.க்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

முதல் ஆக்‌ஷன் Women Safety Amendment Act

விழுப்புரம் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் பின் தொடர்ந்து சென்று ஒருவர் டார்ச்சர் செய்திருக்கிறார்.  காதலிக்க சொல்லி வற்புறுத்தி மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில், கடந்த 2025 ஜனவரி 23ஆம் தேதி சிறுமியின் தந்தையை தாக்கி கொல்ல முயற்சி செய்திருக்கிறார்.

இந்த டார்ச்சரை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அந்த நபர் மீது கண்டச்சிபுரம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்த விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விழுப்புரம் எஸ்.பி சரவணன் எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து , குற்றம் சாட்டப்பட்டவரிடமிருந்து பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் குடும்பத்தினரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு 06.03.2025 முதல் ஓராண்டுக்கான பாதுகாப்பு ஆணை பெறப்பட்டது.

இதன்மூலம் மீண்டும் அந்த சிறுமியை பின் தொடரக்கூடாது. அதுமட்டுமின்றி சிறுமிக்கு தெரிந்தவர்கள் வழியாக தொடர்பு கொள்வது, இணையம் செல்போன் வழியாக தொடர்பு கொள்வது என நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வழியிலும் அச்சிறுமிக்கு தொடந்தரவு கொடுக்கக் கூடாது. மீறினால் அந்த நபருக்கு தண்டனை விதிக்கப்படும்.

விழுப்புரத்தை தொடர்ந்து இந்த  திருத்த சட்டம்  கடலூர் சிதம்பரம் காவல்நிலையம், கள்ளக்குறிச்சி கச்சிராப்பாளையம் காவல்நிலையம், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை காவல்நிலையம், செங்கல்பட்டு திருக்கழுக்குன்றம் காவல்நிலையம் மற்றும் வேலூர் மாவட்டத்தில்  வேப்பங்குப்பம், அரியூர் காவல் நிலையங்களில் பின்பற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் செயல்படுத்தப்பட்டது குறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்த போது,

“பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சட்டமன்றத்தில் சட்டத் திருத்த மசோதாவை அரசு கொண்டு வந்தது. அந்த சட்டத்தை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி உடனே அமல்படுத்த உத்தரவிட்டார்.

இந்த சட்டத் திருத்தத்தின் படி, பாதிக்கப்பட்ட பெண்ணை மீண்டும் பின் தொடர்ந்தால், குற்றம் சாட்டப்பட்ட நபரை ஆர்டிஓ (ரெவென்யூ டெவலப்மெண்ட் ஆபிசர்) முன் ஆஜர்ப்படுத்தி, ”இதன்பின் அந்த பெண்ணை பின் தொடரமாட்டேன்” என பாண்டு பாத்திரத்தில் கையெழுத்து வாங்கப்படும். முதலில் ஓராண்டுக்கு இந்த ஆணை பெறப்பட்டு, அதன்பிறகு ரினிவெல் செய்யப்படும்.

இந்த  உறுதிமொழியை  மீறினால் உடனடியாக கைது செய்யப்பட்டு மூன்று ஆண்டு காலம் சிறையில் அடைக்கப்படுவார். இந்த சட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது காவல்துறை” என்கிறார்.   Women Safety Amendment Act

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share