இதுவரை உலகளாவிய ‘ஆயுட்காலம் நீட்டிப்பு’ (Longevity Market) மற்றும் பயோஹேக்கிங் சந்தையானது முழுக்க முழுக்க ஆண்களின் உடலியல் தரவுகள் (Male Data) மற்றும் ஆண்களுக்கான வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே செயல்பட்டு வந்தது. பெண்களின் ஆரோக்கியப் பாதையும் ஆண்களின் உடல்நிலையை வைத்தே மேலோட்டமாகக் கணிக்கப்பட்டது. ஆனால், அந்த சகாப்தம் இப்போது முடிவுக்கு வருகிறது.
பெண்கள் முற்றிலும் மாறுபட்ட முறையில் வயதாகிறார்கள் (Women Longevity) என்ற புதிய அறிவியல் உண்மைகளின் பின்னணியில், பெண்களுக்கான பிரத்யேக ஆயுட்கால மருத்துவப் புரட்சி தற்போது உலகளவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளது.
பெண்களின் ‘கமாண்ட் சென்டர்’ – கருப்பை (Ovary)!
புதிய மருத்துவ ஆய்வுகளின்படி, பெண்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தீர்மானிக்கும் முதன்மை ‘கமாண்ட் சென்டராக’ அவர்களது சினைப்பை/கருப்பை (Ovary) செயல்படுகிறது.
- வேகமான முதுமை: ஆண்களுக்கு முதுமையின் போது அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென முற்றிலும் முடங்குவதில்லை. ஆனால், பெண்களுக்கு மெனோபாஸ் (Menopause) ஏற்படும்போது சினைப்பையின் செயல்பாடு சட்டென்று நின்றுவிடுகிறது.
- உடல்நலப் பாதிப்புகள்: இந்த திடீர் மாற்றம் பெண்களின் உடலில் ஒட்டுமொத்த முதுமையையும் அசுர வேகத்தில் துரிதப்படுத்துகிறது. இதன் காரணமாகவே ஆண்களை விட பெண்கள் மிக நீண்ட காலம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, டிமென்ஷியா (ஞாபக மறதி நோய்), மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (எலும்பு பலவீனம்) போன்ற தீவிர பாதிப்புகளால் அவதிப்படுகிறார்கள்.
அடுத்த பிரம்மாண்ட பயோடெக் புரட்சி!
சினைப்பையின் முதுமையைத் தடுத்து நிறுத்துவது அல்லது அதன் வேகத்தைக் குறைப்பதுதான் மருத்துவ உலகின் அடுத்த மிகப்பெரிய பயோடெக் (Biotech) கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளது.
- பெண் விஞ்ஞானிகள் தற்போது சினைப்பை ஸ்டெம் செல் சிகிச்சைகள் (Ovarian Stem Cell Therapies) மற்றும் சினைப்பை தழும்பு வாதம் (Ovarian Fibrosis) குறைபாட்டை நீக்குவது போன்ற அதிநவீன ஆராய்ச்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- இதன் மூலம் மெனோபாஸ் அறிகுறிகளை வெறும் தற்காலிகமாகக் குணப்படுத்துவதைத் தாண்டி, சினைப்பையின் ஆயுளை நீட்டிப்பதன் மூலம் பெண்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்நாளை (Healthspan) அதிகரிக்கத் திட்டமிடப்பட்டு வருகிறது.
20 வயது முதல் 90 வயது வரை: புதிய மருத்துவ அணுகுமுறை
இந்த புதிய மாற்றத்தினால், உலகெங்கிலும் உள்ள வெல்னஸ் ரிசார்ட்டுகள், மருத்துவமனைகள், டெலிஹெல்த் தளங்கள் மற்றும் அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்கள் (Wearables) அனைத்தும் பெண்களின் உயிரியலுக்கு ஏற்ப தங்களை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளன.
- முக்கிய பரிசோதனை: சினைப்பை முதுமைப் பரிசோதனைகள் (Ovarian Aging Tests) இனி கொலஸ்ட்ரால் அல்லது ரத்த அழுத்தப் பரிசோதனை போல பெண்களின் முக்கிய வாழ்வியல் பரிசோதனையாக மாறவுள்ளது.
- ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT): ஒரு காலத்தில் ஆபத்தானது என ஒதுக்கப்பட்ட ஹார்மோன் மாற்று சிகிச்சைகள், இப்போது பெண்களின் இளமையைக் காக்கும் முதன்மை ஆயுட்கால மருந்தாக மறுபிரவேசம் எடுத்துள்ளன.
- தவிா்க்க முடியாத உடற்பயிற்சி: பெண்களின் தசை மற்றும் எலும்பு வலிமையை நீண்ட காலம் காக்க ‘ஸ்ட்ரென்த் டிரெய்னிங்’ (Strength Training – பளு தூக்குதல்) பயிற்சிகள் இனி தட்டிக்கழிக்க முடியாத ஒன்றாக மாற்றப் பரிந்துரைக்கப்படுகிறது.
‘ப்ரோ’ கலாச்சாரத்தில் இருந்து மனிதநேய அணுகுமுறைக்கு!
மாறும் கலாச்சாரம்: இதுவரை ஆயுட்கால நீட்டிப்புத் துறையில் நிலவி வந்த கடினமான, எந்திரத்தனமான ஆண்களின் ‘பயோஹேக்கிங் ப்ரோ கலாச்சாரம்’ (Bro Culture) இனி மாறவுள்ளது. எண்களையும் தரவுகளையும் மட்டுமே நம்பி உடலை அதீதமாக வருத்திக்கொள்ளும் (Hyper-optimization) தீவிரமான முறைகளுக்குப் பதிலாக, பெண்களின் பங்களிப்பால் உணர்ச்சிகளுக்கும், நிம்மதிக்கும், யதார்த்தமான ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் ஒரு கனிவான மனிதநேய அணுகுமுறை (Human Approach) வெல்னஸ் சந்தையில் உருவாகத் தொடங்கியுள்ளது.
