ADVERTISEMENT

புதிய BS-VI பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் : சிவசங்கர்

Published On:

| By christopher

Women can travel free in new BS-VI buses : Shivashankar

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு இன்று முதல் (அக்டோபர் 20) 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பேருந்துகளில் இதுவரை 1,905 புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

ADVERTISEMENT

அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பேருந்துகளில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 1,262 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.

மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW) நிதி உதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பேருந்துகளுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பேருந்துகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

ADVERTISEMENT

Image

2024-25 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பேருந்துகளையும் சேர்த்து 242 புதிய பேருந்துகள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த BS-VI சாதாரண பேருந்துகள் “விடியல் பயணத் திட்டத்தில்” இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்க முடியும்” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுவரை பிங்க் நிற பேருந்துகளில் மட்டுமே மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் கட்டணமின்றி பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய BS-VI சாதாரண பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்ய முடியும் என்பது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

IND vs NZ Test : கலக்கத்தில் இந்திய அணி… காப்பாற்றுமா மழை?

”அரசு மருத்துவமனைகளில் சுகாதார குறைபாடு” : சுப்ரியா சாஹு அதிருப்தி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share