திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அடுத்த பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரின் மனைவி சந்தியா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு , இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது. சிவா பெங்களூருவில் வேலை பார்த்துள்ளார். சந்தியா தனியாக சொந்த ஊரில் வசித்து வந்துள்ளார். கடந்த பதினோறாம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு நடத்தி வரும் மாது என்பவர் சந்தியாவிடம் லோன் பணம் வாங்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் கட்டிலில் சந்தியா சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாது கத்தி கூச்சலிட்டார்.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் .
சந்தியாவின் தொலைபேசியை ஆய்வு செய்த போது, இருவர் அவருடன் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. தொடர்ந்து, குமரேசன் மற்றும் விக்னேஷ் என்ற அந்த இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தது. குமரேசனுக்கும் சந்தியாவுக்கும் முதலில் 7 வருடங்கள் தகாத உறவு இருந்துள்ளது . இடையில் விக்னேஷ் என்பருடனும் சந்தியா தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த இளைஞர்களுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமரேசன் சொந்த ஊருக்கு சென்று விட்டதால், விக்னேசுடன் சந்தியா தகாத உறவை தொடர்ந்துள்ளார். இதை அறிந்த குமரேசன் சந்தியாவை கண்டித்துள்ளார்.
இதையடுத்து, பொன்னன்வட்டத்துக்கு வந்த குமரேசன் முதலில் சந்தியாவை தேடி வந்துள்ளார். தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். ஆனால், சந்தியா மறுக்கவே, அவரை அடித்து துன்புறுத்தி உறவில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து, அங்கு வந்த விக்னேசும் சந்தியாவை பலவந்தப்படுத்த அவர் மூச்சுத்திணறி இறந்து போனார். இதையடுத்து, குமேரேசன், விக்னேஷ் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்