பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமான் கெலிஃப் ஆணா? பெண்ணா? என்ற சர்ச்சை வெடித்து இருந்தது. மருத்துவ ரீதியாக அவர் ஆண் என சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் கடந்த ஆண்டு முடிவு செய்து அவருக்கு தடை விதித்திருந்தது. ஆனால், ஒலிம்பிக் தொடரில் இமான் கெலிஃப் போட்டியிட வாய்ப்பு அளித்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்
ஒலிம்பிக்கில் இத்தாலி வீராங்கனை ஏஞ்சலா காரினி இவருக்கு எதிரான போட்டியில் பாதியில் விலகியதோடு ,கெலிஃப்பை ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதித்ததை கடுமையாக சாடியிருந்தார். ஆனால், தடைகளை தகர்த்து இதே ஒலிம்பிக்கில் குத்துச்சண்டை போட்டியில் இமான் கெலிஃப் தங்கப் பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்றதும், தான் பெண்ணாக பிறந்து பெண்ணாகவே வாழ்பவள் என்றும் தன்னை அவமதிக்கும் வகையில் சிலர் தன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைப்பதாகவும் கூறினார். தன்னை ஆண் எனக் கூறிய எலான் மஸ்க், ஜே.கே ரௌலிங் போன்ற பிரபலங்களுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாகவும் கெலிஃப் அறிவித்தார்.
தற்போது, பிரபல மேக்கப் நிறுவனமான பியூட்டி கோடுடன் இணைந்து இமான் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் இமான் கெலிஃப் “மேக்கப்” செய்த பிறகு ஒரு அழகிய இளம் பெண்ணாக காட்சி தருகிறார். இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. பலரும் அவரின் அழகை புகழ்ந்து வருகின்றனர்.
பார்ப்பதற்கு ஆணைப் போல இருந்ததால்தான் பலரும் தன்னை விமர்சித்தார்கள் என நினைத்து அவர் இப்படி செய்திருக்கலாம் என்றும் மனதளவில் அவரை காயப்படுத்தியவர்களுக்கு மன்னிப்பே கிடையாது என்றும் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
திருமா பிறந்தநாள்.. ராகுல், ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!