காதலனுக்காக எஸ்.ஐ வேடம் போட்ட பெண்: கைது செய்த போலீஸ்!

Published On:

| By Minnambalam Login1

Woman arrested for impersonating SI

காதலனை கரம் பிடிக்க கன்னியாகுமரியில் எஸ்.ஐ வேடமணிந்து ஏமாற்றிய இளம் பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர்  சிவா. இவருக்கு ரயில் பயணத்தின்போது சென்னை அருகே தாம்பரத்தைச் சேர்ந்த அபி பிரபா என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த காதல் விவகாரம் குறித்து சிவா தனது தாயிடம் தெரிவித்த நிலையில், அவரது தாயோ தன் மகனை பெண் போலீஸுக்குதான் திருமணம் செய்து கொடுப்பேன் என கூறியதாக தெரிகிறது.

இதனால் தனது காதலி அபி பிரபாவிடம் எஸ்.ஐ வேடமணிந்து வருமாறு சிவா கூறியுள்ளார். இதன்படி அபி பிரபா எஸ்.ஐ வேடம் அணிந்து சிவாவின் தாயாரை சந்தித்திருக்கிறார்.

மேலும் அபி பிரபா தாம்பரம் ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருவதாக சிவா தனது தாயாரிடம் கூறியிருக்கிறார்.

இதற்கிடையில் இந்த விஷயம் ஊர் முழுக்க பரவி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வடசேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து எஸ்.ஐ போல் வேடமணிந்து ஏமாற்றிய அபி பிரபாவையும், அவருடைய காதலரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : தமிழ்நாடு அரசு விடுமுறை முதல் வீகன் நாள் வரை

கிச்சன் கீர்த்தனா: மோத்தி லட்டு!

கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ்… ’கேப்டன்’களை அகற்றிய அணிகள் : காரணம் என்ன?

கோவை நகர போலீசை ரகசியமாக எச்சரித்த என்.ஐ.ஏ… பின்னணியில் கார் வெடிகுண்டு?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share