வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி: கணவனைக் கொல்பவருக்கு ரூ.50,000 பரிசு!

Published On:

| By Selvam

‘எனது கணவனைக் கொன்றால் ரூ.50,000 பரிசு தருகிறேன்’ என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த மனைவி குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேசத்தின் பிந்த் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை, உத்தரப்பிரதேசம் ஆக்ராவைச் சேர்ந்த இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், மணமான சில மாதங்களிலேயே தம்பதியர் இடையே முரண்பாடுகள் அதிகரித்தன. இருவரும் அடிக்கடி குடும்பத் தகராறில் முட்டிக்கொள்வதும் பின்னர் சமாதானம் ஆவதுமாக சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வந்தன.

மண வாழ்க்கையில் இனியும் மகிழ்ச்சிக்கு வாய்ப்பில்லை என உணர்ந்த அந்தப் பெண், 2022-ஆம் ஆண்டு கணவரை விட்டுப் பிரிந்து பெற்றோருடன் வசித்து வர ஆரம்பித்தார்.

மேலும், கணவரை விட்டுப் பிரிந்து வாழ்வதால், முறையான விவாகரத்து கிடைக்கும் வரை தனக்கான பராமரிப்பு தொகையை கணவர் வழங்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் மனைவி புகாரும் செய்திருக்கிறார். விவாகரத்து முடிவு காரணமாக மனைவி வீட்டாருடனும் கணவருக்கான விரோதம் அதிகரித்தது.

இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்னர் வழக்கம் போல சமாதானத் தூதுக்காக மனைவி வீட்டுக்குச் சென்றபோது, நிலைமை முற்றிலுமாக மாறி இருப்பதை கணவர் கண்டறிந்தார்.

அங்கிருந்து நேராக காவல் நிலையம் சென்றவர் மனைவியும் அவரது வீட்டாரும் தன்னை கொல்ல முயல்வதாக புகார் தெரிவித்திருக்கிறார்.

அது மட்டுமன்றி, மனைவி தனது பக்கத்து வீட்டு நபருடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அதுவே ஆரம்பம் முதல் தம்பதி இடையிலான தகராறுக்கு காரணம் என்றும் அவர் புகார் தெரிவித்திருக்கிறார். கணவரின் போலீஸ் புகார் குறித்த தகவலை அறிந்ததும் மனைவி உக்கிரமடைந்தார்.

அதிலும் தகாத உறவு குற்றச்சாட்டால் ஆவேசமான அந்த மனைவி, அதே கோபத்தில் ‘கணவரை கொல்பவருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை’ என்று வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார்.

இந்த விவரம் கணவர் பார்வைக்கு வந்ததும், அது குறித்து இன்னொரு புகாருடன் காவல் நிலையத்தில் முறையிட்டார். இம்முறை பிரச்சினையின் வீரியம் புரிந்த போலீஸார், மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இளம் கணவன் – மனைவி இடையிலான பிரச்சினை சமரசத்துக்கும் வாய்ப்பிருப்பதால், தம்பதி குறித்த கூடுதல் தகவல்களை போலீஸார் தற்போதைக்கு வெளியிடவில்லை. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகிறது.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் பத்திரம்: சட்டம் போட்டுச் செய்யப்பட்ட ஊழல்!

பியூட்டி டிப்ஸ்: தலைமுடியில் ஏற்படும்  துர்நாற்றத்தைத் தவிர்க்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: ஜவ்வரிசி இனிப்புக் கஞ்சி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share