கதையே இல்லாமல் கமல் படத்திற்கு பாட்டு… இளையராஜா சொன்ன சுவாரசிய அனுபவம்!

Published On:

| By christopher

without story i gave super songs for kamal - ilaiyaraaja

அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன இளையராஜா, இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். without story i gave super songs for kamal – ilaiyaraaja

அதற்கு மகுடம் சூட்டும் விதமாக கடந்த மாதம் லண்டனில் தனது வேலியண்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து ஒட்டுமொத்த இசை உலகின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ்நாட்டுக்கும், இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு வரும் ஜூன் 2ஆம் தேதி பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி ஆசிரியர் கார்த்திகை செல்வனுடன் நடந்த உரையாடலில், கதை இல்லாமல், சிச்சுவேஷனும் சொல்லாத எத்தனையோ படங்களுக்கு தான் பாடல் அமைத்த தருணங்களை சுவாரசியமாக பகிர்ந்துள்ளார் இளையராஜா.

உண்மையான சிச்சுவேஷன் என்னன்னா… without story i gave super songs for kamal – ilaiyaraaja

’கமல்ஹாசன் ஒரு முறை சொன்னாங்க, “ராஜபார்வை படத்துக்கு கதை ரெடி ஆகல, எதுவும் ரெடியாகல, ஆனா பாட்டு வேணும்னு உங்ககிட்ட வந்ததா” சொன்னாங்க. அந்த மாதிரி சூழலுக்கும் நீங்க பாடல் அமைத்துள்ளீர்களே’ என்று கார்த்திகை செல்வன் கேள்வி எழுப்பியிருந்தார்.

ADVERTISEMENT

அதற்கு இளையராஜா, “ராஜபார்வை படம் ஆரம்பிக்கும்போது. ஃபர்ஸ்ட் கம்போசிங் என்றார்கள். அதற்காக சென்றோம். அந்தப் படத்தோட இயக்குனர் சிங்கிதம் சீனிவாசராவ், ’டூயட் பாடலுக்கு டியூன் போடுங்க.. கஜல் மாதிரி வேண்டும்’ என்றார். அடுத்து கவிஞர் வாலியை வரச் சொல்லி பாட்டு எழுதலாம் என்றோம். கவிஞரும் வந்தார்.

“என்ன சிச்சுவேஷன்?” என்றார்.

ADVERTISEMENT

“சார், உண்மையான சிச்சுவேஷன் என்னன்னா, நாளைக்கு படத்தோட பூஜை. இன்னைக்கு டியூன் ரெடி பண்றோம். பாட்டு எழுதணும். நாளைக்கு பாடலை ரெக்கார்ட் பண்ண வேண்டும். கதை இன்னும் ரெடி ஆகல. இதுதான் சிச்சுவேஷன்” என்றோம்.

அவர் சிரிச்சிட்டார். “சரி சரி, என்ன டியூன் போட்டு இருக்கீங்க?” என்றார். அப்படி வந்ததுதான் ராஜபார்வை படத்தின் “அழகே அழகே” என்ற பாடல்… என்றார் இளையராஜா.

வாலி மற்றும் இளையராஜா

அப்படினா, ’கதை என்ன, ஏதுன்னு தெரியாமல் பாடல்கள் எல்லாம் உருவாக்கி இருக்கீங்க.. அப்படிதானே? என்று கேட்க,

அதற்கு சிரித்தபடியே, ”ஆமாம், அதெல்லாம் எத்தனை பாடல்கள்!! நாடோடி தென்றல் படத்தில் உருவான அத்தனை பாடல்களும் கதை என்னவென்றே தெரியாமல் உருவானவை தான். நான் சொல்லித்தான், “இப்படி ஒரு கதை, இப்படி வைத்துக் கொள்ளலாம்” என்று சொல்ல சொல்ல, இயக்குனர் ஓகே சொன்னார். அந்த படத்தில் அவ்வாறுதான் பாடல்கள் உருவானது” என்று கூறினார் இளையராஜா.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share