பணிகள் நிறுத்திவைப்பு : நீதிபதி  யஷ்வந்த் வர்மா மீது ஆக்சன்!

Published On:

| By Kavi

Withdraws Judicial Work From Justice Yashwant Varma 

நீதித்துறை பணியிலிருந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா விலக்கி வைக்கப்பட்டுள்ளார். Withdraws Judicial Work From Justice Yashwant Varma 

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இரவு நேரத்தில் தீயணைப்புத் துறையினர் தீயணைக்க சென்ற போது அங்கு கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த  விவகாரம் நீதித்துறை வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அவரை உச்ச நீதிமன்ற கொலிஜியம் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்ததாக தகவல் வந்தது. ஆனால் அதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது. 

அதேசமயம் டெல்லி தீயணைப்பு துறை தலைவர் அதுல் கார்க், நீதிபதி வீட்டில் எங்கள் வீரர்கள் யாரும் பணத்தை கைப்பற்றவில்லை என்று கூறினார். 

இப்படி ட்விஸ்ட் மேல்  ட்விஸ்ட் நடக்க நீதிபதி யஷ்வந்த் வர்மா,  “எனது வீட்டின் ஸ்டோர் ரூமில் இருந்து பண மூட்டை எடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன், முற்றிலும் நிராகரிக்கிறேன். எந்த எரிந்து போன பண மூட்டைகளை யாரும் எங்களுக்கு காட்டவோ, எங்களிடம் ஒப்படைக்கவோ இல்லை. உண்மையில் அன்று இரவில் அகற்ற முயன்ற எரிந்த குப்பைகளில் ஒரு பகுதி இன்னும் என் வீட்டில்தான் இருக்கிறது. தீ விபத்து நடந்த அன்று நானும் எனது மனைவியும் வீட்டில் இல்லை. மத்தியப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தோம்.  தீயை அணைக்கும் போது எனது மகளும் தாயாரும் தான் இருந்தனர். தீயை அணைத்த பிறகு அவர்கள் உள்ளே வந்து பார்த்த போது எந்த பணத்தையும் பார்க்கவில்லை” என்று கூறியிருந்தார். 

இந்தநிலையில்,  டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர்,  நீதித்துறை பணியிலிருந்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவை விலக்கி வைப்பதாகவும், அவருக்கு நீதிமன்ற பணிகள் எதுவும் ஒதுக்கப்படாது என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

“சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நீதித்துறைப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை உடனடியாக திரும்பப் பெறப்படுகின்றன” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 22ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  சஞ்சீவ் கன்னா, டெல்லி உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எந்த நீதித்துறைப் பணியையும் ஒதுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு முன் ஒதுக்கப்பட்டிருந்த வழக்குகள், வேறு நீதிபதிக்கு மாற்றப்படவுள்ளன.  Withdraws Judicial Work From Justice Yashwant Varma 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share