ராமேஸ்வரம் அக்னித் தீர்த்த கடலில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் இன்று (மார்ச் 4) அறிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டண சீட்டு முறை அறிமுகம் செய்ய உத்தேசம் உள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியானது.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பரிகார பூஜை கட்டண அறிவிப்பை திரும்ப பெறுவதாக ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
அதில், ”இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும்,
இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் வருகின்ற மார்ச் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி கடந்த பிப்ரவரி 28 அன்று நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
நிர்வாகக் காரணங்களுக்காக தற்போது இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை, கோவை பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!
எலெக்சன் ஃப்ளாஷ்: ”எடப்பாடியுடன் தொடர்ந்து பேசுகிறது பாஜக” –ஆதரவாளர்களிடம் குமுறிய ஓ.பி.எஸ்