சிவசங்கர் பாபாவுக்கு நெருக்கடி: வழக்கு ரத்தான உத்தரவு வாபஸ்!

Published On:

| By Kalai

மாணவனின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் திரும்ப பெற்றது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவனின் தாய்க்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த 2010ம் ஆண்டு பள்ளி மாணவரின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக் கோரி சிவசங்கர் பாபா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட காலத்தை காரணம் காட்டி வழக்கை ரத்து செய்தது.

ADVERTISEMENT

ஆனால் உத்தரவை திரும்ப பெறக்கோரி சிபிசிஐடி மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று(நவம்பர் 21) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது சிவ சங்கர் பாபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கால தாமதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் வழக்கை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறக்கூடாது என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா புகார் தாரர் தரப்பு வாதத்தை கேட்காமல் வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதி மஞ்சுளா, வழக்கை ரத்து செய்யக்கோரி சிவ சங்கர் பாபாவின் மனுவை பிற்பகல் விசாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

அதிமுக பொதுக்குழு அப்பீல்: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை தாமதம் ஏன்? 

4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share