இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனம் வரும் 2025 நிதியாண்டில் 10,000 முதல் 12,000 புதியவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த சில வருடங்களாக ஐடி சேவை நிறுவனங்களில் பணியாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது விப்ரா நிறுவனம் 12,000 ஊழியர்கள் வரை புதிதாக பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது கல்லூரி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
2024 ஜூன் 30-ல் முடிவடைந்த முதல் காலாண்டில், விப்ரோ நிறுவனம் 3,000 புதியவர்களைப் பணியில் சேர்த்தது. இதில் கடந்த ஜூன் மாதத்தில் மட்டுமே புதிதாக 337 பேரை பணியில் அமர்த்தியுள்ளது.
வரும் நிதியாண்டிலும் 10,000- 12,000 பேர் வரையிலான எண்ணிக்கையில் புதிய பணியாளர்களைச் சேர்க்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் புதியவர்களை நிறுவனத்திற்குக் கொண்டு வரும் பணி தொடங்கியுள்ளது என்று தலைமை மனிதவள அதிகாரி சவுரப் கோவில் நேற்று நடைபெற்ற நிறுவனத்தின் க்யூ1 வருவாய் மாநாட்டின் போது தெரிவித்தார்.
இதுபற்றி பேசியுள்ள அவர், “நாங்கள் சில நிறுவனங்களுடன் தற்போது பார்ட்னர்ஷிப் வைத்திருக்கிறோம். எனவே, இந்த ஆண்டு ஆன் கேம்பஸ் மற்றும் ஆஃப் கேம்பஸில் பலரை பணியமர்த்த உள்ளோம். அடுத்த ஆண்டும் இதேபோன்ற எண்ணிக்கையில் புதியவர்களை பணியமர்த்த உள்ளோம். இதன்மூலம், எங்கள் வளர்ச்சி மீண்டும் பழையபடி இருக்கும் என நம்புகிறோம். எங்கள் பயன்பாட்டு விகிதம் அதன் உச்சத்தை எட்டியுள்ளது. எனவே, எங்களது சப்ளை செயினுக்கான சரியான நேரம் இது என்று கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: கூந்தலை வளமாக்க இதைச் சாப்பிடுங்க…
ஹெல்த் டிப்ஸ்: விரதமிருக்க ஏற்றவரா நீங்கள்? யாரெல்லாம் விரதம் இருக்கக்கூடாது?
டாப் 10 நியூஸ் : அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல் ஐஎம் நார்ம்ஸ் செஸ் தொடர் வரை!
சண்டே ஸ்பெஷல்: இடியாப்பம்… இப்படிச் செய்து பாருங்கள்… ஈஸியா வரும்!