ரூ.100 கோடி வசூலை எட்டுமா விஜய் தேவர கொண்டாவின் கிங்டம்?

Published On:

| By christopher

Will Vijay Devarakonda Kingdom reach Rs. 100 cr?

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக விஜய் தேவரகொண்டா வலம் வருகிறார். 2017ஆம் ஆண்டு அர்ஜூன் ரெட்டி படம் மூலம் கவனம் ஈர்த்த அவர், கீதா கோவிந்தம் மூலம் ரூ.100 கோடி வசூல் சாதனை படைத்த இளம் நடிகர் ஆனார்.

எனினும் பான் இந்தியா படமாக உருவான நோட்டா, டாக்ஸிவாலா, லைகர் உள்ளிட்ட அவரது அடுத்தடுத்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவின.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜெர்சி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வாரம் வெளியானது கிங்டம் திரைப்படம்.

அனிருத் இசையில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனினும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூல் செய்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. சாக்னில்க் வலைத்தளத்தின்படி, நேற்று மட்டும் உலகம் முழுவதும் ரூ.7 கோடி வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று நாட்களில் உலகம் முழுவதும் 67 கோடி ரூபாய் வசூலை கிங்டம் ஈட்டியதாக படத்தை தயாரித்த சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு 100 கோடி வசூலைத் தொட, விஜய் தேவரகொண்டா தடுமாறி வரும் நிலையில், கிங்டம் அதனை எட்டி பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share