பாமகவில் இணையும் வேல்முருகன் அண்ணன்?

Published On:

| By Kavi

தவாக தலைவர் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவன் பாமகவில் இணைய உள்ளதாக தைலாபுர வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. Will Velmurugan brother thirumalvalavan join PMK

தவாக தலைவர் வேல்முருகனின் அண்ணன் திருமால்வளவனும், முன்னாள் வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனலரசனும் நாளை அதிகாரப்பூர்வமாக பாமகவில் இணைகின்றனர் என தகவல்கள் வருகின்றன.

பாமக தலைவரான அன்புமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து வெளியேறினார் வேல்முருகன். அதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கி, அதன் தலைவராக இருந்து வருகிறார்.

மாநிலம் முழுவதும் அமைப்புகளை உருவாக்கி கட்சியை பலப்படுத்தி வருகிறார். திருமால்வளவன் தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவராக இருந்தார். இவரை பாமகவில் இழுக்க ராமதாஸ், வன்னியர் சங்க தலைவர் பு.த அருள்மொழி உள்ளிட்டோர் மூலமாக முயற்சி செய்திருக்கிறார்.

இந்தசூழலில் கடந்த சனிக்கிழமை தைலாபுர தோட்டத்தில் ராமதாஸை சந்திக்க திருமால்வளவனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த தகவல் அன்புமணிக்கு தெரிந்து உடனடியாக தவாக தலைவர் வேல்முருகனை தொடர்பு கொண்டு, உங்கள் சகோதரர் ராமதாஸை சந்திக்கப்போவதாக தகவல் வருகிறது. அதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதையறிந்த திருமால்வளவன் கடந்த சனிக்கிழமை சந்திக்கவிருந்ததை தவிர்த்து இன்று மாலை ராமதாஸை தைலாபுர தோட்டத்தில் சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, பாஜக அறிவுசார் குழுவில் இடம்பெற்றிருக்கும் அரியலூரைச் சேர்ந்த சோழன்குமார் , பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்தசூழலில் அண்ணன் திருமால்வளவனிடம் வேல்முருகன் சார்பில் தொடர்ந்து பேசி வருவதாக தவாக வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share