தமிழ்நாட்டில் மழலையர் பள்ளி (பிளே ஸ்கூல்), நர்சரி பள்ளி நடத்துவதற்கு அனுமதி பெற பல்வேறு நடைமுறைகள் உள்ளன. will tn govt save child from rules violated play school
குழந்தைகள் விளையாட திறந்தவெளி விளையாட்டு மைதானம் இருக்க வேண்டும், நல்ல காற்றோட்ட வசதி இருக்க வேண்டும், குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருக்கக் கூடாது.
தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை, அங்கீகாரம் பெற்ற பொறியாளர் ஆகியோரிடம் தடையில்லா சான்று பெற்று, மாவட்ட கல்வித்துறை அதிகாரி, வட்டாட்சியர் ஆகியோர் நேரிடையாக ஆய்வு செய்து ஒப்புதல் கொடுத்த பிறகே பள்ளி நடத்த கல்வித்துறை அனுமதி கொடுக்க வேண்டும்.
ஆனால் இந்த விதிமுறைகளுக்கு எல்லாம் முரணாக சென்னை ராமாபுரம் அருகே உள்ள ஈவிபி சந்தோஷ் நகரில் 6வது குறுக்குத் தெருவில் little pumpkin play school என்ற பெயரில் இளம் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார் அதன் உரிமையாளர் வெங்கடேஷ்.
கடந்த 2024ஆம் ஆண்டு இப்பள்ளியின் நிலையை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், சட்டத்தை மீறி பள்ளிக்கு அனுமதி கொடுத்தார் சென்னை கல்வித்துறை அதிகாரியான எழிலரசி. அப்போது முதல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு வாசிகள் போராடி வருகின்றனர்.
செக் வைத்த உயர்நீதிமன்றம்! will tn govt save child from rules violated play school
இந்த மழலையர் பள்ளியானது மக்கள் குடியிருக்கும் வீதியில் உள்ள 8 போர்ஷன்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் உள்ளது.

இந்த பள்ளித் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம், அப்பள்ளியை ஆய்வு செய்து, விதிமுறைகளுக்கு முரணாக இருப்பின் நடவடிக்கை எடுக்குமாறு பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்டது.
கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி! will tn govt save child from rules violated play school
அதன்படி அப்பள்ளியை கடந்த ஆண்டு மாவட்ட கல்வி அலுவலர்கள் பார்வையிட்டபோது, அங்கு பல்வேறு குறைபாடுகளைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மொத்தம் 65 மாணவர்கள் படிக்கும் அப்பள்ளியில் குழந்தைகள் விளையாட திறந்தவெளி மைதானம் இல்லை. தனியாக இல்லாமல் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளது.
அனைத்துக்கும் மேலாக குடியிருப்புக்கான வரைபட ஒப்புதல் பெறப்பட்ட கட்டிடத்தில், விதிமுறைகளை மீறி பள்ளி செயல்பட்டு வருகிறது.

எனவே தமிழ்நாடு தனியார் பள்ளி முழுமுறைப்படுத்துதல் சட்டம் 2018 விதி 10-ன் படியும், சட்டம் 23, விதி எண் 11ன் படியும் மழலையர் பள்ளியின் அனுமதி மற்றும் அங்கீகாரத்தை கடந்த 3-3-2025 முதல் திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் உயர்நீதிமன்றம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவை மதிக்காமல், தற்போதும் இந்த பள்ளி நடைபெற்று வருகிறது. நாளையும் வழக்கம்போல பள்ளி திறக்கப்பட உள்ளது.
இதனையடுத்து அங்கு பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி அப்பள்ளி மற்றும் அதன் நிர்வாகத்தினர் மீது தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி குடியிருப்புவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.