Share Market : பட்ஜெட் தாக்கல் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்குமா?

Published On:

| By christopher

Will the budget filing reverberate in the share market?

புதிதாக பதவி ஏற்றுள்ள அரசின் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித பரபரப்பு நிலைக் காணப்படுவதாலும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணினி சேவை தடை காரணமாக நேற்று திங்கள்கிழமை வர்த்தகத்தில் NSE மதியம் 2 மணி வரை இயங்காத காரணமாக BSE மட்டும் செயல்பட்டு இந்திய பங்குச் சந்தைகள் குறியீடுகள் குறுகிய வரம்பில் வர்த்தகம் செய்யப்பட்டன.

அவசர கால சூழல்களில் பங்குச் சந்தையை இயக்குவது எப்படி என்று முதல் முறையாக கடந்த மாதம் ஒரு சனிக்கிழமை அன்று 3 அமர்வு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் நேற்று திங்கட்கிழமை மைக்ரோசாப்ட் பிரச்சினை காரணமாக தேசிய பங்குச்சந்தை மதியம் வரை இயங்காதது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 22 திங்கள்கிழமை வர்த்தக முடிவில் பிஎஸ்இ சென்செக்ஸ் 102 புள்ளிகள் சரிந்து 80,502 புள்ளியிலும், நிஃப்டி 22 புள்ளிகள் குறைந்து 24,509 இல் நிறைவடைந்தது.

2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் விப்ரோ மந்தமான வளர்ச்சியை பதிவு செய்த பின்னர் இதன் பங்குகள் திங்களன்று பிஎஸ்இயில் 9 சதவீதம் சரிந்தன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் (RIL) பங்குகள் திங்களன்று பிஎஸ்இயில் சுமார் 3.5 சதவீதம் சரிந்தன, நிறுவனம் ஏப்ரல்-ஜூன் காலப்பகுதியில் ஒருங்கிணைந்த லாபம் ரூ.15,138 கோடியை ஈட்டியதாகவும் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டியதை விட இது 5.5 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை இன்ட்ராடே வர்த்தகத்தில் சக்தி பம்ப்ஸ் பங்கு 5 சதவீத உயரந்து பிஎஸ்இயில் ஒரு பங்கு 4,095.10 ஆக இருந்தது. ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்த நிறுவனம் நிகர லாபம் 92.66 கோடியை ஈட்டியதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) திங்கள்கிழமை இன்ட்ரா டே வர்த்தகத்தில் பிஎஸ்இயில் 3 சதவீதம் உயர்ந்து ரூ.1,143.80 ஆக இருந்தது. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Irdai) வெளியிட்ட தரவுகளின்படி முதல் காலாண்டில் இதன் சந்தைப் பங்கு 59.59 சதவீதத்தில் இருந்து 64.02 சதவீதமாக உயர்ந்ததாக குறிப்பிடப்ட்ட நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு உயரந்து வருகிறது.

SBI Life Insurance Company Ltd திங்கள்கிழமை கனரா வங்கியின் வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான Can Fin Homes Ltd இன் 10 லட்சம் பங்குகளை ஒரு பங்கிற்கு 827.94 என்ற விலையில் வாங்கியது. இது Can Fin Homes Ltdல் உள்ள 0.75% பங்குக்கு சமம். கனரா வங்கி Can Fin Homes Ltdல் 29.99% பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது‌. திங்கள்கிழமை வர்த்தகத்தில் கேன் ஃபின் ஹோம்ஸ் லிமிடெட் பங்குகள் பிஎஸ்இயில் 0.21% அதிகரித்து ₹850.70 இல் முடிந்தது.

தனியார் துறை வங்கியான ஐடிபிஐ வங்கி, ஜூன் வரையிலான முதல் காலாண்டில் நிகர லாபம் 40 சதவீதம் உயர்ந்து 1,719 கோடியை ஈட்டியதாகவும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய 1224 கோடியை ஒப்பிடுகையில் இது மிகையான வளர்ச்சி என்று தெரிவித்துள்ளது.

திங்கள்கிழமை வர்த்தகத்தில் இதன் பங்கு பிஎஸ்இயில் 0.77 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 89.56 ரூபாய்க்கு முடிவடைந்தது.

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏப்ரல்-ஜூன் முதல் காலாண்டில் அதன் நிகர லாபம் 26.60 சதவீதம் உயர்ந்து ரூ.633 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகலாவிய பங்குச் சந்தையில் ஆசிய பசுபிக் நாடுகளில் சந்தை உயர்வுடன் உள்ளன. ஜப்பான் நிக்கி, தென் கொரியாவின் கொஸ்பி, ஆஸ்திரேலியாவின் S&P மற்றும் ASX, ஹாங்காங்கின் செங் மற்றும் அமெரிக்காவின் நாஷ்டாக் நேர்மறை போக்கில் உள்ளதால் இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தை எதிரொலித்து சந்தை வர்த்தகத்தை உயர்த்து என்று எதிர்பார்க்கப்பட்டாலும். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டுக்கான ஏழாவது தொடர்ச்சியான பட்ஜெட்டை இன்று ஜூலை 23 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்கின்ற நிலையில். மோடி அரசின் 3 வது ஆட்சியாண்டின் பட்ஜெட்டின் சிறப்பம்சம் பற்றிய எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை 5.8 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை, 5.1 சதவீதமாக உள்ளது. முழு வரவுசெலவுத் திட்டம், வரி வருவாய் உயர்ந்து இருப்பதால், முந்தைய கணிப்புகளை விட இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 25-26ஆம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருக்கும் என்று அரசு கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 2024 இல் முடிவடைந்த முதல் காலாண்டில் யூகோ வங்கி நிகர லாபத்தில் குறிப்பிடத்தக்க உயர்வைப் பதிவுசெய்துள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 147 சதவீதம் உயர்ந்து ரூ.551 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ரயில்வே அமைச்சகத்திடம் (ரயில்வே வாரியம்) ரூ.186.81 கோடி மதிப்புள்ள (வரிகள் உட்பட) குறிப்பிடத்தக்க ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

Bajaj Finance, HUL, Kajaria Ceramics, DCM Shriram, M&M Financia, Torrent Pharma, ICICI Securities, SRF, Steel Strips Wheels உள்ளிட்ட நிறுவனங்கள் இன்று முதல் காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளன.

ஜூலை 23 காலை முதல் அமர்வில் இந்திய பெஞ்ச்மார்க் குறியுடுகள் உயர்வுடன் தொடங்கியது. முறையே சென்செக்ஸ் 235 புள்ளிகளும் நிஃப்டி 59 புள்ளிகளும் உயரந்தன.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பங்கு வர்த்தகத்தில் DLF, Oberoi Realty, Sobha, LIC Housing Finance, Aadhar Housing, Home First Finance,HAL, Astra Micro, Bharat Dynamics,Shipping Corporation, Garden Reach Shipbuilders, Adani Ports, Suzlon Energy, Federal Bank, Indus Towers, RailTel,SBI Life,Gensol Engineering,Greenlam Industries நிறுவன பங்குகள் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் செலுத்தப்படும் என்று பங்குச்சந்தை தரகர்கள் கணிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மணியன் கலியமூர்த்தி

பட்ஜெட் தாக்கல் : மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்

சூர்யா பிறந்தநாள் : ரத்தம் தெறிக்கும் கிளிம்பஸ் வெளியிட்ட கார்த்திக்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share