தமிழிசைக்கு எம்.பி சீட் கிடைக்குமா? நடக்கும் ஆடுபுலி ஆட்டம்!

Published On:

| By christopher

தெலுங்கானா, புதுச்சேரி கவர்னரான தமிழிசை செளந்தரராஜனுக்கு எப்படியாவது ஒன்றிய அமைச்சராக வேண்டும் என்பதுதான் பல்லாண்டு கால ஆசை.

புதுச்சேரியில் பாராளுமன்ற வேட்பாளாராக களமிறங்கி வெற்றி பெறுவதற்காக கடந்த ஒரு வருடமாகவே காய்களை நகர்த்தி வந்தார். அதில் முதல் வெற்றியாக புதுச்சேரி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கியிருப்பதன் மூலம் அடைந்துள்ளார்.

அடுத்து வேட்பாளராக வேண்டுமே? இவருக்கு ஆதரவாக பலரும் களத்தில் இறங்கியுள்ளனர். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் இதில் தீவிரம் காட்டி வருகிறார். புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைவரும், ராஜ்ய சபா எம்பியுமான செல்வ கணபதியை அழைத்து டெல்லியில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.  தமிழிசை அக்காவுக்கு நீங்களும் சீட்டை தலைமையிடம் சிபாரிசு செய்ய வேண்டும். எப்படியாவது அவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி காங்.,கில் குழப்பம்: பா.ஜ.,வில் அமைச்சர் நமச்சிவாயம் | Dinamalar

இப்படி பலரும் முயற்சிக்கும்பொழுது  புதுச்சேரி உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த நமச்சிவாயத்தை போட்டியிட வைக்க பாஜக தலைமை வலியுறுத்தியுள்ளது. அவரோ, ‘எனக்கு மாநில அரசியலே போதும்’ என்று ஒதுங்குகிறாராம்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், முதல்வருமான ரங்கசாமியோ புதுச்சேரி கலெக்டராக இருந்து சமீபத்தில் அந்தமானுக்கு மாற்றப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளுவனை நிறுத்துவதற்கு பாஜகவிடம் சிபாரிசு செய்கிறாராம்.

இவர் இல்லாவிடில் நியமன எம்.எல்.ஏவும் பண வசதியுள்ள முதலியார் சமூகத்தை சேர்ந்த ராமலிங்கத்திற்கு சீட் தாருங்கள் என்றும் வலியுறுத்தி வருகிறாராம்.

இந்த காய் நகர்த்துதலில் அக்கா தமிழிசை வெல்வாரா என்பது அமித் ஷாவின் கையில் தான் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வணங்காமுடி

எலக்‌ஷன் ஃபிளாஷ் : விஜயகாந்த் டிவியை வாங்கும் விஜய்! மத்திய அரசுப் பணிக்கு செல்லும் முக்கிய அதிகாரிகள்! அதானிக்கு விற்க மறுப்பு… இந்தியா சிமென்ட்ஸ் மீது ED ரெய்டு பின்னணி!

குடும்ப அட்டைகளில் திருத்தம் செய்ய குறைதீர் முகாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share