விஜயலட்சுமி வழக்கு… இன்று நேரில் ஆஜர் ஆவாரா சீமான்?

Published On:

| By christopher

Will Seeman appear in person today?

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் சீமான் வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இன்று (பிப்ரவரி 27) நேரில் ஆஜராவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. Will Seeman appear in person today?

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி மீண்டும் அளித்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை கடந்த கடந்த 17ம் தேதி விசாரித்த நீதிபதி இளந்திரையன், சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளது. சர்வ சாதாரணமாக இந்த வழக்கை முடித்து விட முடியாது என்றும், அடுத்த 12 வார காலத்திற்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து பிப்ரவரி 27ஆம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளசரவாக்கம் காவல் துறையினர் சம்மன் அனுப்பினர்.

இதற்கிடையே பெங்களூரில் வசித்து வரும் நடிகை விஜயலட்சுமியின் வீட்டிற்கே சென்று சுமார் 5 மணி நேரம் வளசரவாக்கம் போலீசார் நேற்று அவரிடம் விசாரணை நடத்தினர்.

அதனைத்தொடர்ந்து இன்றைய தினம் சீமான் வளசரவாக்கம் ஸ்டேஷனில் நேரில் ஆஜராவார் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சீமான் வழக்கறிஞர் தரப்பு கூறுவதென்ன? Will Seeman appear in person today?

ஆனால், சீமான் கடந்த மூன்று நாட்களாக கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்று வருகிறார். கடந்த 25ஆம் தேதி ராணிப்பேட்டையிலும், நேற்று வேலூரிலும் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார். இன்று அவர் கிருஷ்ணகிரியில் நடைபெறும் கட்சி கூட்டத்தில் கலந்துக்கொள்ள உள்ளார்.

அதற்காக சீமான் கிருஷ்ணகிரிக்கு சென்றுள்ளார். மேலும் ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சிக்காக தனியார் மண்டபத்திற்கு வாடகையும் அளிக்கப்பட்டுள்ளது. எனவே சீமான் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆஜராக மாட்டார் என்று நாம் தமிழர் வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share