தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Will property tax increase again
ஆண்டுதோறும் சொத்து வரியை 6 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் சொத்துவரி உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது சொத்துவரி உயர்த்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
அதாவது 2025-26ஆம் நிதியாண்டில் வெளிப்படையான அறிவிப்பு இல்லாமல் உள்ளாட்சி அமைப்புகள் சொத்து வரியை ஆறு சதவிகிதம் உயர்த்தியுள்ளன என்று நாளிதழ் ஒன்றில் இன்று (மே 3) செய்தி வெளியானது.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், ”ஒன்றிய அரசின் 15-வது நிதிக்குழுவின் நிபந்தனைகளின்படி, ஒவ்வொரு நகர்ப்புற அமைப்பும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சியின் சதவிகிதத்தை ஒப்பிடுகையில் சராசரியாக 11.5 சதவிகிதம் சொத்துவரி வருவாயை உயர்த்தினால் மட்டுமே. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனையைக் கருத்தில் கொண்டு 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சொத்துவரி அரசாணை எண். 113. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (எம்எ4) துறை, நாள் 5.9.2024-ன்படி 6 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையினால் சொத்துவரி எதுவும் உயர்த்தப்படவில்லை.
இந்நிலையில், 3.5.2025 நாளிட்ட ஒரு நாளிதழில் “எவ்வித அறிவிப்புமின்றி உள்ளாட்சி அமைப்புகள், 6 சதவிகிதம் சொத்து வரியை மீண்டும் உயர்த்தி அமலுக்கு வந்துள்ளதாக” வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானதாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Will property tax increase again
