பிரசாந்த் – ஹரி கூட்டணி… கோலிவுட்டுக்கு இன்னொரு ‘தமிழ்’ தருமா?

Published On:

| By uthay Padagalingam

will prashanth hari gang give taste of thamizh

தமிழ் திரையுலகில் சுமார் இருபத்துமூன்று ஆண்டுகளாக இயங்கிவரும் கமர்ஷியல் சினிமா இயக்குனர்களில் ஒருவர் ஹரி. பரபரவென்று நகரும் திரைக்கதைக்கும் அனைத்து அம்சங்களும் கலந்த காட்சியாக்கத்திற்கும் பெயர் பெற்றவர். அவர் முதன்முறையாக இயக்கிய திரைப்படம் ‘தமிழ்’. will prashanth hari gang give taste of thamizh

இந்த படத்தின் நாயகன் பிரசாந்த். நீண்டகாலம் கழித்து இவர்களது கூட்டணியில் புதியதொரு படம் தயாராவதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது. கடந்த ஆறாம் தேதியன்று பிரசாந்த் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

will prashanth hari gang give taste of thamizh

‘தமிழ்’ தந்த அனுபவம்! will prashanth hari gang give taste of thamizh

ஹரியின் முதல் படம் என்றபோதும், எந்தவொரு பிரேமும் நமக்கு அப்படியொரு எண்ணத்தைத் தோற்றுவிக்காது. will prashanth hari gang give taste of thamizh

குவைத்துக்கு வேலை செய்யச் சென்று கை நிறைய சம்பாதிக்க வேண்டுமென்ற கனவோடு இருக்கிற ஒரு இளைஞர், சந்தர்ப்ப சூழ்நிலையால் தான் வாழும் வட்டாரத்திலுள்ள ஒரு பெரிய ரவுடியோடு மோத நேரிடுகிறது. உயிருக்கே ஆபத்து எனும் நிலையில் அந்த இளைஞர் இன்னொரு ரவுடி கும்பலில் சேர்வதும், வெளிநாட்டில் வேலை பார்க்கும் அவரது சகோதரர் ஊர் திரும்பிய பிறகு அந்த விஷயம் அறிந்து வேதனைப்படுவதுமாக அக்கதை நகரும். இறுதியாக, அந்த இளைஞனுக்கு அந்த ரவுடியால் ஏற்பட இருந்த ஆபத்து முற்றிலுமாக நீங்கியதா என்பதைச் சொல்வதோடு அப்படம் முடிவடையும்.

‘தமிழ்’ படத்தில் வடிவேலுவின் காமெடி இருந்தது. கதாநாயகியாக சிம்ரன் நடித்திருந்தார். சென்டிமெண்டுக்கு மனோரமா, ஊர்வசி லிவிங்ஸ்டன், டெல்லி கணேஷ் போன்றோர் இருந்தனர். ’தில்’ படத்தில் ரசிகர்களை மிரள வைத்த ஆஷிஷ் வித்யார்த்தி இதில் பெரியவர் ஆக நடித்தார். will prashanth hari gang give taste of thamizh

இப்படி ரசிகர்கள் எதிர்பார்க்கிற பல விஷயங்கள் இருந்தாலும், வழமையான கமர்ஷியல் படமாக ‘தமிழ்’ அமையவில்லை. காரணம், அதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட் ‘யதார்த்தமாக’ இருக்குமாறு பார்த்துக்கொண்டார் இயக்குனர் ஹரி. அதுவே அந்த படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கக் காரணமானது.

2002, ஏப்ரல் 12ஆம் தேதியன்று விக்ரமின் ‘ஜெமினி’, விஜயகாந்தின் ‘ராஜ்ஜியம்’, விஜய்யின் ‘தமிழன்’, விஜயசாந்தியின் ‘ஸ்ரீ பண்ணாரி அம்மன்’ ஆகிய படங்களோடு ‘தமிழ்’ வெளியானது. கடுமையான போட்டிக்கு மத்தியில், மெல்ல ‘வின்னராக’ உருவெடுத்தது.

பரத்வாஜ் இசையில் ‘கண்ணுக்குள்ளே காதலா’, ‘காதலெனும் ஜோருல’, ‘விக்குதே’ பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தன.

ஒளிப்பதிவாளர் ப்ரியனின் பங்களிப்பு, இப்படத்தின் திரைக்கதை பரபரவென்று இருந்ததை ரசிகர்கள் உணரக் காரணமாக இருந்தது. ‘தமிழ்’ வெற்றி இந்த கூட்டணி அடுத்தடுத்து சில படங்களில் இணையக் காரணமானது. will prashanth hari gang give taste of thamizh

will prashanth hari gang give taste of thamizh

ஹரியின் பிற படங்கள்! will prashanth hari gang give taste of thamizh

‘தமிழ்’ படத்தின் திரைக்கதையில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மதுரை வட்டாரத்தில் நிகழும் கதை என்பதை உணர்த்துகிற விஷயங்கள் படம் முழுக்க விரவப்பட்டிருக்கும்.

என்னதான் சினிமாத்தனம் நிறைந்திருந்தாலும், ‘யதார்த்தம்’ என்று நம்பத்தக்க வகையிலேயே காட்சியாக்கம் அமைந்திருக்கும். அந்த திரைக்கதை ட்ரீட்மெண்ட் ‘மிஸ்’ ஆகாமல் பார்த்துக் கொண்டிருப்பார் ஹரி.

அதன்பிறகு அவர் இயக்கிய ‘சாமி’, ‘அருள்’, ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’ என்று எந்தப் படத்திலும் அதனைக் காண முடியவில்லை. அந்தப் படங்கள் பெருவெற்றி பெற்றபோதும் கூட, அவற்றை இப்போது காண நேர்ந்தால் நம்மால் அதே ‘பிணைப்பை’ பெற முடியாது. ஆனால், ’தமிழ்’ திரைப்படம் தருகிற அனுபவத்தில் பெரிதாக மாற்றம் இருக்காது.

‘தமிழ்’ படத்தில் குடும்ப உறவுகளுக்கு பெரிய முக்கியத்துவம் தந்திருப்பார் ஹரி.

அண்ணியாக வரும் ஊர்வசி கண் முன்னே பிரசாந்தின் வேட்டியைச் சில ரவுடிகள் அவிழ்க்கும் காட்சியும், அதன்பின்னே வரும் அடிதடியும் திரைக்குள் நம்மை ஈர்த்துவிடும்.

போலவே, மனோரமா பாத்திரத்தின் மரணச் செய்தியை பிரசாந்துக்கு தெரியாமல் லிவிங்ஸ்டன் மறைப்பதும், அதற்கடுத்த சில நொடிகளில் அது அவருக்குத் தெரிய வருவதும் நம் கண்களில் நீரை வரவழைக்கும்.

மனோரமாவிடம் ஆஷிஷ் வித்யார்த்தி பேசுகிற காட்சி கூட, பெரிதாக நாம் தமிழ் படங்களில் பார்க்காத ஒன்று.

அது போன்ற காட்சிகளைக் கொஞ்சம் அதீதமாகக் காட்டுவது அல்லது முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளுவது மட்டுமே அதுவரை தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. அந்த வரையறைகளை மீறி, மிகலாவகமாக அது போன்ற காட்சிகளைக் கையாண்டார் இயக்குனர் ஹரி.

அப்படிப்பட்ட ஹரி, ‘சென்னையில இருந்து தூத்துக்குடிக்கு எப்படி அரை மணி நேரத்துல வந்தேன் தெரியுமா’ என்பது போன்ற நிமிடக் கணக்குடன் நாயகர்களை அடுத்தடுத்த படங்களில் வசனம் பேசவைத்தார். அதற்குக் கிடைத்த கைத்தட்டல்களால், ‘இதுவே நமக்கான பாதை’ என்று நின்றுகொண்டார்.

உண்மையில், ஹரி போன்ற இயக்குனர்களுக்குச் சவாலையும் ஆசுவாசத்தையும் ஒருங்கே அளிப்பது ‘தமிழ்’ போன்ற திரைப்படங்கள் தான். சில காலம் அதனைத் தவறவிட்டவர், மீண்டும் அதனைக் கண்டடையக் காலம் ஒரு வாய்ப்பைத் தந்திருக்கிறது.

‘அதீத ஹீரோயிசம் எப்போதும் ஆபத்து’ என்பதைச் சமீபகாலமாகப் பல திரைப்படங்கள் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில், யதார்த்தத்துடன் கூடிய ஆக்‌ஷன் கதைகளே தியேட்டரில் இருந்து எழவிடாமல் ரசிகர்களைக் கட்டிப்போடும் வாய்ப்பினைக் கொண்டிருக்கின்றன.

வரவிருக்கும் ‘பிரசாந்த் 55’இல் அப்படியொரு காட்சியனுபவத்தை நமக்கு இயக்குனர் ஹரி, பிரசாந்த் கூட்டணி தந்தால் நன்றாகயிருக்கும்!

will prashanth hari gang give taste of thamizh
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share