பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பிப்ரவரி 26 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த கும்பமேளா நீட்டிக்கப்படலாம் என்னும் வதந்திக்கு பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் விளக்கமளித்துள்ளார். will maha kumbhmela will be extended
உத்தரப் பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகள் சந்திக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி மகா கும்பமேளா மிக விமரிசையாக தொடங்கியது. இந்த மகா ஆன்மிக திருவிழா பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவடைகிறது. இதையொட்டி, இந்தியா முழுவதும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டுவருகின்றனர்.
இதுவரை 55 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு, புனித நீராடி வழிபட்டுள்ளனர். பிப்ரவரி 26ஆம் தேதி கும்பமேளா முடிவடையும்போது இந்த எண்ணிக்கை 60 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையை கணக்கிட்டால், நாட்டின் 38 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதுவரை புனித நீராடலில் பங்கேற்றுள்ளனர்.
மவுனி அமாவாசை நாளில் 8 கோடி பக்தர்கள், மகர சங்கராந்தி அன்று 3.5 கோடி பக்தர்கள், ஜனவரி 30ஆம் தேதி 1.7 கோடி பக்தர்கள், பிப்ரவரி 1ஆம் தேதி 2 கோடி பக்தர்கள், பிப்ரவரி 2ஆம் தேதியான பசந்த பஞ்சமி அன்று 2.57 கோடி பக்தர்கள், மாக் பூர்ணிமா தினமான பிப்ரவரி 12ஆம் தேதி 2 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்டபடி நிறைவடையும்! will maha kumbhmela will be extended
இந்நிலையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் மகா கும்பமேளா நீட்டிக்கப்படும் என்று வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்தியை மறுத்து, பிரயாக்ராஜ் மாவட்ட கலெக்டர் ரவீந்திர மந்தர் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் குறிப்பிட்ட சுபநேரங்களை அடிப்படையாக கொண்டுதான் மகா கும்பமேளா தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எனவே, எந்த மாற்றமும் இல்லாமல் பிப்ரவரி 26ஆம் தேதி திட்டமிட்டபடி கும்பமேளா நிறைவடையும். மகா கும்பமேளா நீட்டிக்கப்படும் என்னும் வதந்தியை நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.