முடிவுக்கு வருமா? வேலை நிறுத்தமா? அரசு ஊழியர் அமைப்புகளுடன் இன்று அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

Published On:

| By Mathi

TN Govt talks

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளுடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் அடங்கிய குழு இன்று (ஜனவரி 2) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புகள் அறிவித்துள்ளன.

ADVERTISEMENT

இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசு அமைத்த ககன்தீப் சிங் பேடி குழுவும் அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

இந்த பின்னணியில் தமிழக அமைச்சர்கள் குழு இன்று அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்புடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் இப்பேச்சுவார்த்தையை நடத்துகிறது. இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுமா? அல்லது அரசு ஊழியர்கள்- ஆசிரியர் சங்கங்கள் அறிவித்தபடி ஜனவரி 6-ந் தேதி முதல் வேலை நிறுத்தம் தொடங்கப்படுமா? என்பது தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share