மூளும் இந்தியா – பாகிஸ்தான் போர்… ரத்தாகிறதா ஐபிஎல்?

Published On:

| By christopher

Will IPL 2025 matches be stopped due to war?

கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நடப்பு ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. will ipl 2025 called off due to ind pak war

சென்னை, ராஜஸ்தான், ஹைதராபாத் அணிகள் தொடரில் இருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டன. மீதமுள்ள 7 அணிகளில் பிளே ஆஃப் செல்லும் அந்த 4 அணிகள் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

இந்தியாவின் பதிலடி! will ipl 2025 called off due to ind pak war

இதற்கிடையே கடந்த மாதம் 22ஆம் தேதி ஜம்மூ காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வந்தது. அதன் தொடர்ச்சியாக யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் இன்று அதிகாலை ’ஆபரேசன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.

பஹாவல்பூர், முரிட்கே மற்றும் சியால்கோட் உள்ளிட்ட பாகிஸ்தானில் உள்ள நான்கு இடங்களும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் (PoJK) உள்ள ஐந்து இடங்களும் குறிவைத்து அழித்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் இனியும் திருந்தாவிட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எச்சரித்துள்ளார்.

பிசிசிஐ விளக்கம்! will ipl 2025 called off due to ind pak war

அடுத்தடுத்த தாக்குதலால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் கண்டுகளித்து வரும் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என கேள்வி எழுந்துள்ளது.

அதற்கு பிசிசிஐ தரப்பில் இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

”மே 25 வரை நடைபெறவிருக்கும் நடப்பு ஐபிஎல் சீசன் வழக்கம் போல் தொடரும். தற்போதைய சூழ்நிலையால் ஐபிஎல் அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது. போட்டிகள் தொடர்ந்து திட்டமிட்டபடி நடைபெறும்” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தரப்பில் இன்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டுகளில் ஐபிஎல்! will ipl 2025 called off due to ind pak war

முன்னதாக, 2009 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு காரணமாக ஐபிஎல் தொடர் முதன்முறையாக வெளிநாட்டில் (தென்னாப்பிரிக்கா) நடத்தப்பட்டது.

பின்னர் 2014 சீசனில், ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 30 வரை என பாதி ஐபிஎல் போட்டிகள் அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது.

2020 மற்றும் 2021ஆம் ஆண்டில், கடுமையான கொரோனா தொற்று பரவல் காரணமாக ஐபிஎல் போட்டி மீண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக இந்தியாவின் மும்பை, புனே, கொல்கத்தா மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு இடங்களில் மட்டுமே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. will ipl 2025 called off due to ind pak war

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share