முதலிடத்தில் இந்திய கால்பந்து அணி… ஆசிய கோப்பைக்கு தகுதி பெறுமா?

Published On:

| By christopher

will india qualify for AFC U20 Women Asian Cup

மியான்மர் அணிக்கு எதிரான AFC U-20 மகளிர் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய மகளிர் அணி இன்று (ஆகஸ்ட் 10) மோத உள்ளது.

அடுத்த ஆண்டு AFC U-20 மகளிர் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இதில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள், அடுத்தாண்டு செப்டம்பரில் போலந்தில் நடைபெறும் 2026 FIFA U-20 மகளிர் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும்.

ADVERTISEMENT

இந்த நிலையில் அத்தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் பூட்டானில் கடந்த 6ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இதில் குரூப் D பிரிவில் மியான்மர், இந்தோனேசியா மற்றும் துர்க்மெனிஸ்தான் அணிகளுடன் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 6ஆம் தேதி இந்தோனேசியாவுடனான போட்டியில் கோல் அடிக்காமல் டிரா ஆனது. எனினும் அடுத்து 8ஆம் தேதி நடந்த போட்டியில் துர்க்மெனிஸ்தானை 7-0 என்ற கணக்கில் வென்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில், யாங்கோனில் உள்ள துவுன்னா மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் மியான்மர் அணியை எதிர்கொள்கிறது இந்தியா.

மியான்மரை வெல்லும்பட்சத்தில் இந்திய மகளிர் அணி அடுத்த ஆண்டு நடைபெறும் AFC U-20 மகளிர் ஆசிய கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெறும்.

மியான்மருடன் டிரா செய்தால், இந்தோனேசியா மற்றும் துர்க்மெனிஸ்தான் இடையேயான இரண்டாவது போட்டியின் முடிவுக்காக இந்திய அணி காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதில் துர்க்மெனிஸ்தான் வெற்றி பெற்றால், இந்திய அணி நேரடியாக தகுதி பெறும். ஆனால் இந்தோனேசியா வெற்றி பெற்றால், இந்தியா தகுதி பெறும் வாய்ப்பை இழக்கக்கூடும்.

இந்தியா vs மியான்மர் AFC U-20 மகளிர் ஆசிய கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டி இந்திய கால்பந்து யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share