கடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் தோற்றதற்கு பழிக்குப்பழியாக இன்றைய போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி தோற்கடித்து வெளியேற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. will india kick out pakistan ct 2025
பாகிஸ்தான் மற்றும் துபாயில் 9வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று மதியம் 2.30 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற 5 லீக் போட்டிகளின் போதும் மைதானம் கூட்டமே இல்லாமல் ஆரவாரமின்றி காட்சியளித்தன.
இந்த நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியையொட்டி ஏற்கெனவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – பாகிஸ்தான் அணி நிலவரம்! will india kick out pakistan ct 2025
நடப்பு தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெறும். அதற்காக இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும்.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டு 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியிலும் ஒருவேளை தோற்க நேரிட்டால், தொடரை விட்டு அந்த அணி வெளியேற நேரிடும்.
அதேவேளையில் லண்டன் மைதானத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை முத்தமிட்டது பாகிஸ்தான் அணி. அதே போன்று இன்றைய போட்டியிலும் இந்திய அணியை தோற்கடித்து தனது பெருமையை காப்பாற்ற பாகிஸ்தான் போராடும்.
சாதனை படைப்பாரா கோலி? will india kick out pakistan ct
இன்னும் 15 ரன்கள் எடுத்தால் சர்வதேச ஒருநாள் போட்டியில் 14,000 ரன்களை எட்டிய மூன்றாவது வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைப்பார். மேலும், உலக அளவில் மிக அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையும் அவர் வசப்படும். இதுவரை 298 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 286 இன்னிங்ஸ்களில் 13,985 ரன்கள் அடித்துள்ளார் விராட் கோலி.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள அவர், இன்றைய போட்டியிலும் அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இன்றையை போட்டியில் வங்கதேசத்துடன் களமிறங்கிய அதே அணியை கேப்டன் ரோகித் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணி உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் விவரம்!
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது. ஷமி
பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் முன்னணி வீரரான ஃபகார் ஜமான் காயம் காரணமாக விலகியுள்ளார். இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அணி உத்தேச பிளேயிங் லெவன் வீரர்கள் விவரம்!
பாகிஸ்தான்: பாபர் அசாம், இமாம்-உல்-ஹக், சவுத் ஷகீல், முகமது ரிஸ்வான் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), சல்மான் அலி ஆகா, தயாப் தாஹிர், குஷ்தில் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது.
இப்போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் நேரலையில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் இணையப் பக்கம் மற்றும் ஆப்களிலும் பார்க்கலாம்.
சென்னையில் இந்த போட்டியை பொதுமக்கள் நேரலையில் கண்டுகளிப்பதற்கு வசதியாக சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் அகன்ற திரையில் காண தமிழக விளையாட்டு மேம்பாட்டு வாரியம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.