தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்da ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் இன்று ஜனவரி 20-ந் தேதி தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். இதற்காக சட்டப்பேரவைக்கு வருகை தரும் ஆளுநர் ரவிக்கு மரபுப்படி மரியாதை வழங்கப்படும்.
இதனையடுத்து சட்டப்பேரவை கூடியதும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும் போது தமிழ்த் தாய் வாழ்த்துடன் தேசிய கீதத்தையும் பாட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆளுநர் ரவி, தமது உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்து வருகிறார்.
இதனால் இன்றும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி உரையாற்றுவாரா? அல்லது வெளிநடப்பு செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆளுநர் ரவி உரைக்குப் பின்னர் சட்டப்பேரவை அலுவல் குழு கூட்டம் நடைபெறும். அதில், நடப்பு கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என முடிவு செய்யப்படும்.
