டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் நீக்கப்பட்டிருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியதற்கு பாஜக பதில் அளித்துள்ளது. Will Ambedkar picture be removed
நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. பாஜக எம்எல்ஏ ரேகா குப்தா முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஆம் ஆத்மியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் அதிஷி நியமிக்கப்பட்டார்.
சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து சட்டப்பேரவை நடைபெற்றது. முதல் நாளிலேயே பாஜக – ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு, கடும் அமளியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் டெல்லி சட்டப்பேரவை முதல்வர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பகத் சிங் புகைப்படம் நீக்கப்பட்டு, காந்தி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் மட்டும் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.
“டெல்லி முதல்வர் இருக்கைக்கு அருகே இருந்த அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் பட்டியலின மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை பாஜக மீண்டும் நிரூபித்துள்ளது” என்று முன்னாள் முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் தற்போதைய முதல்வர் ரேகா குப்தா ஒரு ட்வீட் செய்துள்ளார்.
அதில், கெஜ்ரிவாலுக்கு பொய்களுடன் நீண்ட தொடர்பு உள்ளது. இங்கே முதல்வர் அறையில் பகத்சிங், அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள் உள்ளன” என்று குறிப்பிட்டு, அதன் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். Will Ambedkar picture be removed