கோடைக்காலம் முடியும் வரை… வனத்துறை எடுத்த நடவடிக்கை!

Published On:

| By Raj

இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஆறுகள் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வறண்டுவிட்டதால் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. Wild animals hit by water scarcity

கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வனப்பகுதி பசுமையாக மாறியது. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு தேவையான தண்ணீர் வனப்பகுதியில் கிடைத்தது.

ADVERTISEMENT

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் வனப்பகுதியில் உள்ள நீரோடைகள் வறண்டு வருகிறது. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் தேடி சமவெளி பகுதிக்கு வரக்கூடும் என்று பொது மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் தேவியாறு, நகரியாறு, அய்யனார் கோயில் ஆறு, ராக்காச்சி அம்மன் கோயில் ஆறு, செண்பகத்தோப்பு பேயனாறு, அத்திகோயில் ஆறு, அர்ஜுனா நதி, தாணிப்பாறை உள்ளிட்ட பல்வேறு ஆறுகள் மற்றும் நீரோடைகள் உள்ளன. Wild animals hit by water scarcity

ADVERTISEMENT

மேலும் சாஸ்தா கோயில் அருவி, மீன்வெட்டிப்பாறை அருவி உள்ளிட்ட 13 அருவிகள், சாஸ்தா கோயில் அணை, பிளவக்கல் அணை ஆகியவை உள்ளன. இதன் மூலம் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், வன விலங்குகளின் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்கின்றன.

இந்த நிலையில், கடுமையான வெயில் காரணமாக கோடைக்காலம் தொடங்கும் முன்பே ஆறுகள் வறண்டு வருவதால் வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது. இதனால் மலையடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Wild animals hit by water scarcity

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள வனத்துறையினர், “கடந்த டிசம்பர் மாதம் முதல் பனியின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. தற்போது வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. குட்டைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. புற்களும் காய்ந்துள்ளன. யானை, காட்டுமாடுகள் மற்றும் மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தற்போது நீர் நிலைகளைத் தேடி இடம் பெயரத் தொடங்கியுள்ளன.

வனவிலங்குகளின் தாகத்தைப் போக்கும் வகையில், தற்போது வனத்துறை சார்பில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் குட்டைகளில் நீர் நிரப்பும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் விலங்குகளுக்காக கொண்டு செல்லப்படுகிறது. இந்தக் கோடைக்காலம் முடியும் வரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share