‘தாமரை மலர்’ கொடுத்து ராமதாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மனைவி!

Published On:

| By Mathi

PMK Ramadoss Birth Day

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று ஜூலை 25-ந் தேதி தமது 87-வது பிறந்த நாளை கொண்டாடினார். ராமதாஸுக்கு அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், பாஜகவின் சின்னமான ‘தாமரை மலர்’ கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது கவனம் பெற்றுள்ளது.

பாமக நிறுவனர் தலைவரான டாக்டர் ராமதாஸுக்கு இன்று 87-வது பிறந்த நாள். மகன் அன்புமணியுடனான ராமதாஸ் மோதல் பெரும் பிளவாக வெடித்திருக்கிறது. ராமதாஸின் பிறந்த நாளில்தான் அன்புமணி, தமிழ்நாடு தழுவிய பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தில் தனது பெயர், பாமக என்ற கட்சி பெயர், பாமக கொடி ஆகியவற்றை அன்புமணி பயன்படுத்தக் கூடாது என தடை விதித்திருக்கிறார் ராமதாஸ். மேலும் தமது பெயருக்கு பின்னால் ராமதாஸ் என அன்புமணி சேர்க்கவும் கூடாது என மீண்டும் மீண்டும் எச்சரித்தும் வருகிறார்.

இந்த பின்னணியில் ராமதாஸின் 87-வது பிறந்த நாளை பாமகவினர் தமிழ்நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடினர்.

டாக்டர் ராமதாஸுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுக்கு பாஜகவின் சின்னமான தாமரை மலரை கொடுத்து வாழ்த்து சொன்னார் மனைவி சரஸ்வதி அம்மையார்.

பாஜகவின் சின்னம் தாமரை. பாஜகவின் அதிகார மையமான ஆடிட்டர் குருமூர்த்திதான், ராமதாஸ்- அன்புமணி விவகாரத்தில் தலையிட்டு சமாதான முயற்சிகளை முன்னெடுத்தார். இதனால் ராமதாஸ், பாஜக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புகள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவின் தாமரை மலர் சின்னத்துடன் ராமதாஸை மனைவி சரஸ்வதி அம்மையார் வாழ்த்தியது கவனம் பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share