பிக்பாசில் அர்னவ் அவுட்… இன்ஸ்டாவில் திவ்யா போடும் பதிவுகள் என்ன தெரியுமா?

Published On:

| By Kumaresan M

நடிகை அர்னவ் சீரியல் நடிகை திவ்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அர்னவ் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் முறையிலும் திவ்யா ஸ்ரீதர் இந்து என்பதால் இந்து முறையிலும்  திருமணம் செய்து கொண்டனர்.

திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த போது விஜய் டிவியில் செல்லம்மா சீரியலில் அர்னவ் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த அன்ஷிதாவோடு அர்னவிற்கு தொடர்பு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

இதன் காரணமாக, அர்னவ்  தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யா குற்றம் சாட்டி வந்தார் . பின்னர், திவ்யா போலீசில் புகார் அளிக்க, அர்னவ் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் வெளியே வந்திருந்தார்.பிறகு,.  அன்ஷிதாவோடு அர்னல் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் 8 சீசனில்  அன்ஷிதா மற்றும் அர்னவ் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.  நேற்று அர்னவ் பிக்பாசில் இருந்து  எலிமினேஷன் ஆனார்.நேற்றிலிருந்து ட்விட்டர் பக்கத்தில் அர்னவ் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் நிலையில் அர்னவ்வின்  மனைவி திவ்யா ஸ்ரீதர் இதையெல்லாம் சட்டை கூட செய்யவில்லை.

திவ்யா,  தான் தீபாவளி ஸ்பெஷல் எபிசோடில் சூட்டிங் கலந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்தபடி ஜாலியாக இருக்கிறார்.

சில நாட்களாகவே பிக் பாஸ் வீட்டிற்குள் அன்ஷிதா மற்றும் அர்னவிற்கும் இடையே சண்டை ஏற்படும் போது திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ரொம்பவும் சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொண்டு  டான்ஸ் ஆடிய வீடியோக்களை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இதுபோல எப்பவும் இருக்க வேண்டும் என்று திவ்யா மீது அன்பு மழை பொழிந்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 தங்கலான் ஓடிடி ரிலீஸ்… க்ரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்!

கவரப்பேட்டை ரயில் விபத்து சதியா?: க்யூ பிரிவு போலீசார் சொல்வது என்ன?

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share