விடுதலை முதல் பாகத்தின் பட்ஜெட் குறித்த உண்மையை இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் விடுதலை பார்ட் 1. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டது.
இளையராஜா இசையில் வெளியான இப்படத்தினை ஆர்எஸ் என்போடெயின்மெண்ட், கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்திருந்தது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விடுதலை முதல் பாகத்துக்கு ஆன செலவு எவ்வளவு? என்பதை வெற்றிமாறன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர், ” முதலில் 4.5 கோடிகள் தான் இப்படத்தின் பட்ஜெட் ஆக இருந்தது. ஆனால் அதில் 70% படத்தின் 10% படப்பிடிப்பிற்கே சரியாகி விட்டது. நாங்கள் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை. மொத்த படத்தையும் முடிப்பதற்கு 65 கோடிகள் வரை செலவாகி விட்டது. இதனால் தான் படத்தை இரண்டு பாகங்களாக திட்டமிட்டோம்.
விஜய் சேதுபதி படத்திற்குள் வந்த பிறகு படத்தின் மதிப்பு அதிகரித்து விட்டது. ஆரம்பத்தில் அவரிடம் வெறும் 8 நாட்கள் கால்ஷீட் கேட்டிருந்தேன். பின்னர் அது 70 நாட்களாக உயர்ந்து விட்டது ,” என தெரிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் பட்ஜெட்டை விட சுமார் 15 மடங்கு அதிகம் விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு செலவாகி இருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
பிறந்த குழந்தையின் உடல் அட்டைப்பெட்டியில்! மார்ச்சுவரி ஊழியர் சஸ்பெண்ட்!
எம்.பி. பதவி பறிப்பு : சட்ட போராட்டத்தைத் தொடங்கிய மஹூவா மொய்த்ரா