பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. Why the name Operation Sindoor
சுமார் 25 நிமிடங்களில் 24 ஏவுகணைகளை ஏவி வெற்றிகரமாக இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்தியா பெயர் வைத்ததற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.
“சிந்தூர்” என்றால் இந்து பெண்கள் நெற்றி வகிடில் வைக்கும் குங்குமம் ஆகும். பஹல்காம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஆண்கள் தான் அதிகம் கொல்லப்பட்டனர். சுற்றுலா சென்றவர்களை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் அவர்களின் மதத்தைக் கேட்டு மனைவிகள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். இதனால் 25 பெண்கள் விதவைகள் ஆகினர்.
திருமணத்திற்கு பிறகு தேனிலவுக்கு சென்ற இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அவர்களில் ஒருவர் ஆவார். அவரது மனைவி ஹிமான்சி தனது கணவருக்கு அருகே கண்ணீருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர்களின் நெஞ்சை உலுக்கியது. கணவரின் இறுதிச் சடங்கில் மீளா துயருடனும் கம்பீரத்துடனும் ஹிமான்சி ஜெய் ஹிந்த் சொன்ன வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்தநிலையில் தான் தங்களது கணவனை இழந்த பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட படத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில் இடம் பெற்ற O என்ற எழுத்துக்கு பதிலாக ஒரு கிண்ணத்தில் குங்குமம் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கு பின்னால் குங்குமம் கொட்டிக் கிடக்கிறது.
இது 25 பெண்களின் வாழ்க்கைத் துணைவர்களைப் பறித்த இரக்கமற்ற தன்மையைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் நீதி நிலைநாட்டப்பட்டது. ஜெய் ஹிந்த் என்று கூறியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிதான் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததாக பிடிஐ ஊடகம் தெரிவித்துள்ளது. Why the name Operation Sindoor
