சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மீண்டும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகில் நாளை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 16) மீண்டும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கமளித்தார்
அவர் பேசுகையில், “ரெட் அலர்ட் எதற்கு அறிவித்திருக்கிறோம் என்றால் அந்த கற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் இருக்கிறது. அது நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. ரெட் அலர்ட் என்றால் எல்லா இடத்திலும் 20செ மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்பது கிடையாது.
காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது. காலை பொழுதுக்கும், மதிய பொழுதுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கும்.
நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது ஓரிரு இடங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. இது ஒருநாளுக்கான ரெட் அலர்ட். கவனமாக இருக்க வேண்டும் என்பதால் அலர்ட் கொடுக்கிறோம்.
மழைக்கு மட்டுமே ரெட் அலர்ட் கிடையாது. அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் மற்றதையும் கணக்கில் வைத்துதான் ரெட் அலர்ட் கொடுக்கப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
வாய்க்கு பூட்டு மும்பைக்கு ஜூட்… பாடகி சுசித்ரா திடீர் முடிவு!
எடப்பாடிக்கு ஷாக் விடியல்… மழைப் பணிகளை பட்டியலிட்ட அமைச்சர் நேரு