சுயமரியாதையை காத்த ராஜஸ்தான் ராயல்ஸ்… ‘கோச்’ டிராவிட் முடிவின் பின்னணி!

Published On:

| By Kumaresan M

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றிய பின், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.  தொடர்ந்து,  ராகுல் டிராவிட் எந்த ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக டெல்லி, மும்பை, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் ராகுல் டிராவிட்டை ஒப்பந்தம் செய்ய முயற்சித்தன. அந்த அணிகள் டிராவிட்டிடம் சம்பளம் குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடத்தாமல் பிளாங்க் செக் கொடுக்க முன் வந்ததாக தெரிகிறது.

எனினும் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராகுல் டிராவிட் தேர்வு செய்தற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. அதாவது ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டு முதல் 3 ஆண்டுகள் ராகுல் டிராவிட் ஆர்சிபி அணிக்காகவே விளையாடினார். 2011 ஆம் ஆண்டு ஏலத்தின் போது , ராகுல் டிராவிட்டை ஏலம் எடுக்க ஆர்சிபி விரும்பவில்லை.

மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணியின் ஆலோசகர் அனில் கும்ப்ளே, உரிமையாளர் விஜய் மல்லையா ஆகியோர் ராகுல் டிராவிட்டின் பெயர் சொல்லப்பட்ட போது, அமைதியாக இருந்து விட்டனர். அப்போது, ராகுல் டிராவிட்டுக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

இந்த சமயத்தில் ராகுல் டிராவிட்டை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் முன் வந்தது. கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டது. அவமானக்கரமான அந்த தருணத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ராகுல் டிராவிட்டுக்கு உதவிக்கரமாக இருந்தது. அந்த நன்றியை மனதில் கொண்டே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ராகுல் டிராவிட் டிக் செய்தததாக சொல்கிறார்கள். ராகுல் டிராவிட்டுக்கு 7 கோடி வரை சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஸ்ருதி வாழ்க்கையில் விளையாடும் எமன்… நிலச்சரிவில் குடும்பமே பலி… விபத்தில் வருங்கால கணவரும் இறப்பு!

கவலையைக் கரைக்கும் வடிவேலு ‘காமெடி’கள்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share