பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி உருக்கத்துடன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில் ”நீங்கள் முதல்வராக இருந்தபோது, குஜராத்துக்கு இரு முறை வந்த சுனிதாவுக்கு ஒரு முறை கூட ஏன் பாராட்டு விழா எடுக்கவில்லை” என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன், இந்திய வம்சாவளியும், நாசா விண்வெளி வீராங்கனையுமான சுனிதா வில்லியம்ஸ் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றார். ஒன்பது மாத கால நீண்ட இடைவெளிக்கு பிறகு அங்கிருந்து இருவரும் இந்திய நேரப்படி நேற்று காலை 10:35 மணிக்கு டிராகன் விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டனர். அவர்கள் 17 மணி நேர பயணத்திற்கு பிறகு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3:27 மணிக்கு புளோரிடா கடற்கரையில் தரையிறங்கினர்.why modi not recognise sunita?
இந்த நிலையில், அமெரிக்கா பயணத்திற்கு பின்னர் சுனிதா வில்லியம்ஸ் குறித்து பிரதமர் மோடி எழுதிய கடிதத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று வெளியிட்டிருந்தார்.

அதில், “அமெரிக்க சென்றிருந்த போது ஒரு நிகழ்ச்சியில், பிரபல விண்வெளி வீரர் மைக் மாசிமினோவை சந்தித்தேன். எங்கள் உரையாடலின் போது, உங்கள் பெயர் வந்தது, உங்களைப் பற்றியும் உங்கள் பணியைப் பற்றியும் நாங்கள் எவ்வளவு பெருமைப்படுகிறோம் என்பதைப் பற்றி விவாதித்தோம். அந்த உரையாடலைத் தொடர்ந்து, உங்களுக்கு கடிதம் எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை.
நான் அமெரிக்காவிற்கு வருகை தந்தபோது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் பைடனை சந்தித்தபோது, உங்கள் நலம் குறித்து விசாரித்தேன்.
1.4 பில்லியன் இந்தியர்கள் எப்போதும் உங்கள் சாதனைகளில் மிகுந்த பெருமை கொண்டுள்ளனர். நீங்கள் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து எங்கள் இதயங்களுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள். இந்திய மக்கள் உங்கள் நல்ல ஆரோக்கியத்திற்காகவும் உங்கள் பணியில் வெற்றி பெறவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.why modi not recognise sunita?
நீங்கள் பூமிக்கு திரும்பிய பிறகு, இந்தியாவில் உங்களைப் பார்க்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இந்தியா தனது மிகவும் புகழ்பெற்ற மகள்களில் ஒருவரை வரவேற்பது மகிழ்ச்சியாக இருக்கும்” என்று மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், உண்மையிலேயே சுனிதா வில்லியம்ஸ் வருகையை மனமார எதிர்பார்க்கிறாரா? என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது,’ மோடி சுனிதா வில்லியம்சுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆனால், சுனிதா அதை தூக்கி குப்பையில் போடுவார். ஏன் தெரியுமா? மோடியை எதிர்த்த சுனிதாவின் சகோதரரை கொலை செய்ததற்காக’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் குஜராத்தை சேர்ந்தவர். இவரின், தந்தையின் பெயர் தீபக் பாண்ட்யா. சுனிதாவின் ஒன்று விட்ட சகோதரர் ஹரென் பாண்ட்யா. குஜராத்தில் கேசுபாய் பட்டேல் முதல்வராக இருந்த போது உள்துறை அமைச்சராக இருந்தவர். 2001 ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு காட்சி மாறியது. குஜராத்தில் அகமதாபாத்திலுள்ள எல்லிஸ்பிரிட்ஜ் தொகுதியில் ஹரென் பாண்ட்யா எம்.எல்.ஏவாக இருந்தார். இதே தொகுதியில் போட்டியிட மோடி விரும்பினார். ஆனால், ஹரென் பாண்ட்யா விட்டு தரமறுக்கவே, இருவருக்குமிடையே முதல் முறையாக மோதல் ஏற்பட்டது.

தொடர்ந்து, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக வி.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவிடத்தில் ஹரென் பாண்ட்யா, மோடிக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது வெளியே கசிந்தது. இதனால், மோடி தரப்பு இன்னும் காட்டமானது.
இதன் காரணமாக, பாரதிய ஜனதா கட்சிக்குள் மோடி,ஹரென் பாண்ட்யா தரப்புக்கிடையே மோதல் வலுத்தது. தொடர்ந்து, 2002 ஆம் ஆண்டு ஹரெனுக்கு பாரதிய ஜனதா கட்சி சீட் ஒதுக்கப்படவில்லை. பின்னர், 2003 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி காலையில் வாக்கிங் சென்ற ஹரென் சுட்டுக் கொல்லப்பட்டார்.why modi not recognise sunita?
இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு கலவரம் காரணமாக லஸ்கர் இ தொய்பா இயக்கத்தினர் பழிக்குப்பழியாக ஹரெனை கொன்றதாக சொல்லப்பட்டது. இந்த வழக்கில் கைதான 12 பேருக்கு 5 ஆண்டுகள் முதல் ஆயுள்தண்டனை வரை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே, ஹரெனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று பல முறை கூறியும் முறையான பாதுகாப்பு கொடுக்கப்படாததே இதற்கு காரணமென்று கூறப்படுகிறது. ஹரென் பாண்ட்யா கொல்லப்பட்டதற்கு மோடிதான் காரணம் என அவரின் தந்தை ஆர்.எஸ்.எஸ் செயற்பாட்டாளர் விட்டல்பால் பாண்ட்யா ஓப்பனாகவே அப்போது குற்றம் சாட்டினார்.

அப்போது முதலே சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்துக்கும் மோடி தரப்புக்கும் மோதல் இருந்துள்ளது. இதன் காரணமாகவே, சுனிதா வில்லியம்சுக்கு குஜராத் அரசு தரப்பில் இருந்து ஒரு முறை கூட பாராட்டு விழா எடுத்ததில்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
இத்தனைக்கும் சுனிதா வில்லியம்ஸ் முதல் விண்வெளி பயணத்துக்கு பிறகு, 2007 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இரு முறை குஜராத்திலுள்ள தனது பூர்வீக கிராமமான மெக்சானா மாவட்டத்திலுள்ள ஜுல்சன் கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டெலிகிராப் பத்திரிகை 2007 ஆம் ஆண்டு ஜுன் 21 ஆம் தேதி செய்தி ஒன்று வெளியிட்டிருந்தது. அதில், சுனிதா வில்லியம்ஸ் தனது சகோதரர் ஹரென் மீது அளவற்ற பற்று கொண்டவர். 1988 ஆம் ஆண்டு அவருக்காக குஜராத்தில் தேர்தல் பிரசாரமும் செய்தார். கடந்த 2007 ஆம் ஆண்டு சுனிதா குஜராத் வந்த போது, மோடி அரசு முற்றிலும் புறக்கணித்துவிட்டது . எதிர்க்கட்சியினர் சுனிதாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்ட பின்னரும் மோடி அரசு அமைதியாகவே இருந்தது. விசுவ குஜராத்தி சமாஜம் என்ற சர்வதேச அமைப்பு ’சுனிதாவை மோடி பழிவாங்குகிறார்” என்று விமர்சித்தது” இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில்தான் 2025 ஆம் ஆண்டு திடீரென சுனிதா வில்லியம்ஸை பாராட்டி கடிதம் எழுதிள்ளதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது, மோடி எதையுமே தனது அரசியல் ஆதாயத்துக்காக மட்டுமே செய்வார் என்றும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.