கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு : நிதியமைச்சகம் வெளியிடும் 1 ரூபாயில் மன்மோகன் கையொப்பம் எப்படி?

Published On:

| By Kumaresan M

இந்திய பிரதமர்களில் வேறு யாருக்கும் இல்லாத ஒரு பெருமை மன்மோகன் சிங்குக்கு உண்டு. அது, இந்திய ரூபாய் தாள்களில் அவரது கையொப்பம் இடம் பெற்றிருப்பதுதான். இந்திய பிரதமர்களில் மற்றவர்கள் எல்லாம் தீவிர அரசியலில் ஈடுபட்டு பிரதமர் ஆனவர்கள். ஆனால், ஆர்.பி.ஐ கவர்னராக இருந்த மன்மோகன் சிங் திடீரென்று அரசியலுக்கு வந்தவர். தேர்தலில் நின்றது கிடையாது. ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து பிரதமரானவர்.

மன்மோகன் சிங் ஆர்.பி.ஐ கவர்னராக இருந்ததால், ரிசர்வ் வங்கி வெளியிடும் அனைத்து ரூபாய் தாள்களிலும் அவரது கையொப்பம் இடம் பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை மட்டும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடாது. இந்த நோட்டை இந்திய மத்திய நிதியமைச்சகம் நேரடியாக வெளியிடும். இதனால், மத்திய நிதியமைச்சக செயலரின் கையொப்பம்தான் அந்த நோட்டுகளில் இடம் பெற்றிருக்கும்.

ADVERTISEMENT

இதனால், ஆர்.பி.ஐ. கவர்னராக மன்மோகன் சிங்கின் கையொப்பம் இந்த நோட்டில் இருக்காது. அதேவேளையில், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சகத்தின் செயலராக இருந்தார். அப்போது, மன்மோகன் கையொப்பத்தில் ஒரு ரூபாய் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் , ரிசர்வ் வங்கி ஆளுநர், நிதியமைச்சக செயலர் என அனைத்து விதமான ரூபாய் நோட்டுகளிலும் மன்மோகனின் கையொப்பம் இடம் பெற்றது. இது வேறு எந்த இந்திய பிரதமருக்கும் கிடைக்காத பெருமை ஆகும்.

நிதியமைச்சகத்தின் செயலர் பதவியில் இருந்து விலகிய போது, அங்கிருந்த ஊழியர்கள் ஒரு ரூபாய் நோட்டில் அவரிடத்தில் கையொப்பம் வாங்கி நினைவாக வைத்திருந்தனர். தற்போது, அவர் கையொப்பமிட்ட ஒரு ரூபாய் நோட்டு புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ADVERTISEMENT

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அப்போது ‘சிங்கம் அண்ணா’ செய்த காரியம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share