அரசியல் மோதல்களுக்கு அமலாக்கத் துறை ஏன் பயன்படுத்தப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. Why is ED being used for political conflicts
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் (மூடா) 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்தது. இந்த மனைகள் சட்டவிரோதமாக ஒதுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து சோதனை மேற்கொண்டது. சித்தராமையாவுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியது.
அமலாக்கத் துறை வழக்குத் தொடர்பாக சித்தராமையா சார்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா, முடா நில ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக முதல்வரின் மனைவி பார்வதிக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர் .கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் முன்பு இன்று (ஜூலை 21) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, “அரசியல் மோதல்கள் ஒருபக்கம் இருக்கட்டும், அதற்காக ஏன் அமலாக்கத் துறை பயன்படுத்தப்படுகிறது. எங்கள் வாயை திறக்கவைத்துவிடாதீர்கள். இல்லையெனில் அமலாக்கத் துறை பற்றி கடுமையாக ஏனேனும் சொல்லிவிடபோகிறோம். எனக்கு மகாராஷ்டிராவில் சில அனுபவங்கள் உள்ளது. நாடு முழுவதும் இந்த நிலையை நிலைநிறுத்தாதீர்கள்” என்று காட்டமாக தெரிவித்தார்.
தொடர்ந்து, கர்நாடகா உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்து அமலாக்கத் துறையின் மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர்.
இந்த உத்தரவால் முதல்வர் சித்தராமையா தரப்பினர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் ஆர்.கே.எம். பவர்ஜென் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத் துறை ஒன்றும் சூப்பர் போலீஸ் அல்ல என ஈடி-க்கு கண்டனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. Why is ED being used for political conflicts
