டெல்லி ஆர்ப்பாட்டம்: மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பங்கேற்காதது ஏன்?

Published On:

| By vanangamudi

Why didn't student union leader Rajiv Gandhi participate

டெல்லியில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில், அந்த அணியின் மாநில தலைவரான ராஜீவ் காந்தியே கலந்துகொள்ளவில்லை. Why didn’t student union leader Rajiv Gandhi participate

யுஜிசி புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று (பிப்ரவரி 6) திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திமுக துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா மற்றும் திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.

திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம்! Why didn’t student union leader Rajiv Gandhi participate

ஆ.ராசா, “மாநில பல்கலைக் கழகங்களை பாதுகாப்போம்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பதாகையை ஏந்தி யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்.

Why didn't student union leader Rajiv Gandhi participate

திமுக மாணவரணியினர், ‘கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்ற வேண்டும்’, ‘கல்வி என்பது எங்களுடைய உரிமை’, ‘புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள் என்று மிரட்டாதே’, ‘மாநில உரிமையை குறைக்காதே’, ’யுஜிசி வரைவை திரும்ப பெறு’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் குறித்து டெல்லியில் இருக்கும் திமுக மாணவரணி வட்டாரத்தில் விசாரித்தபோது,

“ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள மாணவரணியைச் சேர்ந்த பலரும் நேற்றே டெல்லி வந்துவிட்டனர். நேரம் இருந்ததால் நேற்று ஆக்ராவுக்கு சென்று தாஜ்மகாலை கண்டு ரசித்தனர்.டெல்லி வீர் பூமியில் உள்ள மகாத்மா காந்தி, ராஜிவ் காந்தி நினைவிடத்தையும் சுற்றிபார்த்தனர்.

இன்று காலை 9 மணிக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் நடந்த இடமான ஜந்தர் மந்தருக்கு மாணவரணியினர் வந்துவிட்டனர். திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ் மாணவர் மன்றத்தில் இருந்தும் பலர் வந்து கலந்துகொண்டனர்.

இன்றைக்கு காலையிலேயே ஜந்தர் மந்தரில் ரெடிமேடு மேடை போட்டுவிட்டார்கள்.

Why didn't student union leader Rajiv Gandhi participate

9.30 மணிக்கு வந்த திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எல்லா ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டார். அங்கிருந்தவாறு அனைவருக்கும் போன் செய்து எல்லோரும் நேரத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

9.45 மணிக்கெல்லாம் அனைத்து எம்.பி.க்களும் வந்துவிட்டனர். ஒவ்வொரு எம்.பியுடனும் 5 பேர் வந்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், வைகோ உள்ளிட்டோர் வருகைத்தந்தனர்” என்றார்கள்.

என்ன காரணம்? Why didn’t student union leader Rajiv Gandhi participate

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி மாநில தலைவர் ராஜீவ் காந்தி கலந்துகொள்ளவில்லை.

திமுக மாணவரணி ஆர்ப்பாட்டத்துக்கு மாணவரணி தலைவர் ஏன் வரவில்லை. டெல்லியில் நடக்கும் ஒரு முக்கியமான ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவரே கலந்துகொள்ளாததற்கு என்ன காரணம் என்று அவர்களிடத்தில் கேட்டோம்.

“நாம் தமிழர் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர் ராஜீவ் காந்தி. அவருக்கு மாணவர் அணி மாநில தலைவர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டது. மாநில செயலாளர் பதவி காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசனுக்கு வழங்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் இருவரும் ஒத்த கருத்துடன் இருந்ததில்லை. இருவரும் சேர்ந்து பணி செய்தது கிடையாது. மாணவரணியைச் சேர்ந்த சிலர் ராஜீவ் பக்கமும், சிலர் எழிலரசன் பக்கமும் இருக்கின்றனர்.

Why didn't student union leader Rajiv Gandhi participate

இருந்தாலும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜீவ் காந்தி வராததற்கு காரணம் உள் நோக்கம் இல்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லை.

எனினும், அவரது ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தும், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ராஜீவ் காந்தியின் ஆதரவாளர்கள் பலரும் டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்” என்று கூறுகிறார்கள்.

நாம் இது தொடர்பாக ராஜீவ் காந்தியிடமே பேச அவரை தொடர்பு கொண்டோம். அவரது அலைபேசி ஸ்விட்ச் ஆஃப் ஆக இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share