ரஜினி கமல் படத்திலிருந்து விலகல்… ஆனால் விஜய் படத்தில்…: லோகேஷ் கனகராஜ் பேட்டி!

Published On:

| By Kavi

ரஜினி கமல் படத்திலிருந்து விலகியது, ஜனநாயகன் படத்தில் நடித்திருப்பது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் பேட்டி அளித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் கூலி திரைப்படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து ரஜினி – கமல் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த படத்தை அவர் இயக்கவில்லை.

ADVERTISEMENT

ரஜினி கமலை லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களில் அன்ஃபாலோ செய்ததாகவும் தகவல் வெளியானது.

இப்படி தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவிய நிலையில் லோகேஷ் கனகராஜ்  இன்று (ஜனவரி 26) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

கூலி மீதான விமர்சனம்

அப்போது அவர், “கூலி படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடியது.  லாபகரமான வசூல் என்று சன் பிக்சர்ஸ் கூறியது.  1000 விமர்சனங்களையும் தாண்டி அந்த படம் 35 நாட்கள் ஓடியது. இந்த படத்தின் மீதான விமர்சனங்களை ஒரு கற்றலாக எடுத்துக் கொண்டேன். அடுத்தடுத்த படங்களில் அத்தகைய குறைகள் வராதவாறு பார்த்துக் கொள்வேன்.

ADVERTISEMENT

ரஜினி – கமல் இணையும் படத்தில்…

46 வருடம் கழித்து இருவரும் ஒரு படத்தில் ஒன்றிணைகிறார்கள். அவர்கள் என்னிடம்  இயக்குமாறு கேட்டதே மிகப்பெரிய விஷயம். அப்போது கைதி 2 பணிகளும் நடந்தது. எனவே, கைதி படக்குழுவினரிடம், எனக்கு மீண்டும் இப்படி ஒரு பட வாய்ப்பு கிடைக்காது என்று கூறி இடைவெளி எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன்.

ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் இயக்க சுமார் ஒன்றரை மாதம் திரைக்கதை எழுதினேன்.

ஆனால், அவர்கள் இருவரும் தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்துள்ளதால் ஒரு ‘லைட்-ஹார்ட்டட்’ (Light-hearted) படம் பண்ணலாம் என்று விருப்பம் தெரிவித்தனர். எனக்கு அத்தகைய கதைகளை உருவாக்கத் தெரியாது என்பதால், அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன்.

LCU தொடரும்

இதற்கிடையே கைதி  2 படம் எடுக்க மீண்டும் நான் எப்போது வருவேன் என்பது தெரியாததால், அந்த படத்தை வேறொரு இயக்குநரிடம் கொடுத்துவிட்டனர். இதுதான் நடந்தது.

இந்தசூழலில் ஏற்கனவே கமிட் ஆகியிருந்த அல்லு அர்ஜூன் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்று திட்டமிட்டேன். ஆனால் நிறைய சம்பளம் கேட்டேன், அதனால் தான் கைதி 2 படத்துக்கு என்னை அழைக்கவில்லை என்றெல்லாம் எழுதியிருந்தார்கள். அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

அல்லு அர்ஜுன் படத்தை முடித்த பிறகு கைதி 2 பணிகளை தொடங்குவேன்.  ‘LCU’ (லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்) முடிந்துவிட்டது என்ற வதந்திகள் பரவின. அப்படியெல்லாம் இல்லை. LCU தொடரும்.

பாலிவுட்டில்… 

பாலிவுட் நடிகர் அமீர் கானுடன் ஒரு படம் பண்ண பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்று கூறினார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தேவதாஸ் என்ற படத்தில் லோகேஷ் நடித்து வருகிறார். இந்த படம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  இதற்கு ”அருண் தான் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.

அவரது படத்தில் போதைப்பொருள்  மற்றும் வன்முறைகள் இடம் பெறுவது குறித்த கேள்விக்கு, “தனது படங்களில் போதைப்பொருளைக் காட்டுவது அதை ஊக்குவிக்க அல்ல, மாறாக அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்.  “Say No To Drugs” பிரச்சாரத்திற்காகத் தான் பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உறுதிமொழி எடுக்க வைத்துள்ளேன்” என்று கூறினார்.

கூலி படம் சென்சார் பிரச்சினையை சந்தித்தது பற்றி?

“சென்சார் போர்டு முதலில் படத்தைப் பார்த்துவிட்டு 35 இடங்களை வெட்ட (Cuts) சொல்லியும், 9 இடங்களில் மியூட் செய்யவும் அறிவுறுத்தியது. ஆனால், அத்தனை காட்சிகளையும் நீக்கினால் படம் முழுமையற்றதாகத் தோன்றும் என்பதால் மீண்டும் சென்சார் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ரஜினி மற்றும் சன் பிக்சர்ஸிடம் கேட்ட போது, இருவரும் எனது முடிவிற்கு முழு சுதந்திரம் அளித்து, படம் ஒரு “Complete Film”ஆக இருக்க வேண்டும் என்று கூறினர்.

தொடர்ந்து ரீ-சென்சாரிலும் அதே 35 கட்டுகள் பரிந்துரைக்கப்பட்டன. குறிப்பாக பிணங்களை எரிப்பது போன்ற காட்சிகள் கருப்பொருள் ரீதியாக ஏன் இருக்க வேண்டும் என்ற கேள்விகள் எழுந்தன. ஒரு கட்டத்தில் 40-50 கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும், படத்தின் முழுமைக்காகவும் தரத்திற்காகவும் ‘A’ சான்றிதழுடன் படத்தை வெளியிட முடிவெடுக்கப்பட்டது.

முக்கியமான காட்சிகளைத் தவிர்த்துவிட்டு புரியாத ஒரு படத்தை ‘U/A’ சான்றிதழுடன் தருவதை விட, முழுமையான படத்தை ‘A’ சான்றிதழுடன் தருவதே சிறந்தது என நினைத்தேன்” என பதிலளித்தார்.

ஜனநாயகன் படத்தில் நடித்துள்ளீர்களா?

விஜய் அண்ணாவும் எச்.வினோத் அண்ணாவும் அழைத்ததால் அந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளேன்.

பிரச்சாரம் செய்வீர்களா?

அரசியலுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை.

இவ்வாறு பேட்டி அளித்தார் லோகேஷ் கனகராஜ்

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share