திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு இன்று (மார்ச் 10) விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டு அரசியலில் ’மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயரில் கடந்த 2018ஆம் ஆண்டு கட்சி தொடங்கினார் கமல்ஹாசன்.
அதனைதொடர்ந்து திமுக, அதிமுகவிற்கு மாற்றுக்கட்சி என்று 2019 மக்களவை தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு சீட் கூட வெல்ல முடியவில்லை.
இந்த நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அக்கட்சி ஒரு மாநிலங்களவை சீட்டை பெற்றுள்ளது.
மேலும், தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ளப்படும் என்று கமல்ஹாசன் நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து அவரை விமர்சித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மதவாத சக்திகளுக்கு கைகூடி விடக்கூடாது!
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது தொடர்பாக விளக்கமளித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தற்போது வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “மதவாத சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாக வந்து அரசியலில் குதித்திருப்பது என்பது பாராட்டத்தக்கது. இன்று நாடு இருக்கும் நிலைமையை பார்த்து எதிர்க்கட்சிகளுடன் கரம் கோர்ப்பதற்கு துணிச்சல் வேண்டும்” என்ற முன்னுரையுடன் வீடியோ தொடங்குகிறது.
தொடர்ந்து கமல்ஹாசன் குரலில், “இந்த நிலை (திமுகவுடன் கூட்டணி) என்பது ஒரு அவசர நிலை. இது தமிழ்நாட்டிற்கும் தேசத்திற்கும் பயனுள்ளதாக அமைய வேண்டும். இந்திய நாடு மதவாத சக்திகளுக்கு கைகூடி விடக்கூடாது என்பதற்காக நாங்கள் எடுத்திருக்கும் முடிவு இது.
இந்தியா வாழ்க; தமிழ்நாடு ஓங்குக; தமிழ் வெல்க!#KamalHaasan #MakkalNeedhiMaiam pic.twitter.com/BJ3yk4uNqg
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 10, 2024
எந்த கட்சியில் இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே சகோதரர்கள் தான். நான் இந்தியாவின் பன்முகத்தன்மையை உண்மையாக நம்புகிறேன். தேசத்திற்காக நாம் அனைவரும் ஒரே மேடையில் அமர வேண்டும். அதுதான் என்னுடைய அரசியல்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
காங்கிரஸுக்கு போகிறதா கடலூர்?: ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் திமுகவினர்!
தர்மபுரி நேர்காணல்: அன்புமணி களமிறங்கினால்… மாறும் திமுக வியூகம்!