இந்தியா நடத்திய தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மௌலானா மசூத் அசார் கூறியுள்ளார். Why did India target Masood Azhar
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் இன்று (மே 7) அதிகாலை பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.
மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன.
ஆனால் பலி எண்ணிக்கை குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் பஹவல்பூரில் உள்ள ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லாஹ் மீதான தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவரான மசூர் அசாத் மூத்த சகோதரி, அவரது கணவர், ஒரு மருமகன் மற்றும் அவரது மனைவி என பத்து பேர் கொல்லப்பட்டதாக மசூர் அசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது நெருங்கிய கூட்டாளிகள் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
மசூர் அசாத் முகாமை குறிவைத்து தாக்கியது ஏன்? Why did India target Masood Azhar
2019 ஆம் ஆண்டு நாடே காதலர் தினம் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் காஷ்மீரில் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்கள் வாகனங்களின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டது மசூர் அசாத்தின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான்.
புல்வாமா தாக்குதலுக்கு முன்பும் பின்பும் பல்வேறு நாசக்கார சதிகளுக்கு திட்டமிட்டவர்.
1994 ஆம் ஆண்டு காஷ்மீரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தபோது ஸ்ரீநகரில் வைத்து கைது செய்யப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதலுக்கும் , 2008ல் நடந்த மும்பை தாக்குதலுக்கும் இவர் மூளையாக செயல்பட்டார்.
அதோடு பதான்கோட் விமான படைத் தாக்குதல், உரித்தாக்குதல் என மசூத் ஆசாரின் தீவிரவாத தாக்குதல் பட்டியல்கள் தொடர்கிறது.
1999ஆம் ஆண்டு நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து டெல்லிக்கு கிளம்பிய விமானத்தை தீவிரவாதிகள் கைப்பற்றி அதை ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் சென்றனர்.
விமான பயணிகளை பணய கைதிகளாக வைத்து இந்திய சிறையில் உள்ள மூன்று தீவிரவாத கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர்.
அப்போதைய பிரதமர் வாஜ்பாய் விமான பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொறுமை காத்தார்.
தொடர்ந்து பயணிகளின் நன்மை கருதி கடத்தல்காரர்களின் நிபந்தனை படி மூன்று தீவிரவாதிகளை வாஜ்பாய் விடுவித்தார்.
அவர்களில் ஒருவர் மசூத் அசார். இந்திய சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை தொடங்கி, காஷ்மீரை மீட்பதே ஒரே நோக்கம் என்று பல நாசக்கார வேலைகளை செய்து வந்தார்.
இந்த சூழலில் தான் அவரது முகாமை இந்திய ராணுவம் குறிவைத்து தாக்கியிருக்கிறது.
தற்போது மசூத் அசார் பஹவல்பூரில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. Why did India target Masood Azhar
