சிஎஸ்கே அணியின் புதிய ஸ்பான்சர் ஆனது ஏன்? : எதிஹாட் அதிகாரி விளக்கம்!

Published On:

| By christopher

Why did CSK become the team's new sponsor

சென்னை சூப்பர் கிங்ஸின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் உருவெடுத்துள்ளது. Why did CSK become the team’s new sponsor

இந்தாண்டுக்கான ஐபிஎல் சீசன் மார்ச் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. இதையொட்டி அனைத்து ஐபிஎல் அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன.

அந்த வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்ஸி அறிமுக விழா சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நேற்று (பிப்ரவரி 8) நடைபெற்றது.

சுமார் சுமார் 2 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்ற நிலையில் சென்னை அணியின் வீரர்களான தீபக் சஹார், முகேஷ் சவுத்ரி, ராஜ் வர்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் 2024 சீசனில் சென்னை சூப்ப அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய விமான நிறுவனமான எதிஹாட் விமான சேவை நிறுவனம் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட சென்னை அணியின் புதிய ஜெர்ஸியும் அறிமுகம் செய்யப்பட்டது.

இருவரும் 5 முறை வென்றுள்ளோம்!

விழாவில் எதிஹாட் ஏர்வேஸின் தலைமை வருவாய் அதிகாரி அரிக் டி பேசுகையில், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நாங்கள் ஸ்பான்சராக இருப்பது ஒரு அசாதாரண பயணத்தின் தொடக்கம். எங்கள் ஒத்துழைப்பு ஸ்பான்சர்ஷிப்பிற்கு அப்பாற்பட்டது. இது எதிஹாட் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸின் கூட்டு மனப்பான்மைக்கு ஒரு சான்று.

ஐபில் தொடரில் சென்னை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேபோன்று உலகின் சிறந்த விமான நிறுவன விருதுகளை எதிஹாட் வென்றுள்ளது. இனி இருவரும் சேர்ந்து பல பட்டங்களை வெல்வோம்.

ரசிகர்கள் மற்றும் பயணிகளுக்கு மறக்க முடியாத தருணங்களை உருவாக்குவது மட்டுமல்லாமல், எல்லைகளைக் கடந்து விளையாட்டின் உத்வேகத்தை உயர்த்தும் சக்திவாய்ந்த தொடர்பை உருவாக்குவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கால்பந்தாட்ட அணிகளுக்கு எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்து வருகிறது. இந்த நிலையில் முதன்முறையாக ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு ஸ்பான்சாராக களமிறங்கியுள்ளது.

எதிஹாட் நிறுவனத்தின் பிராண்ட் தூதராக சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகையான கத்ரீனா கைப் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

”அன்னைக்கு இதே தெருவுல கார் வாஷ் பண்ணிட்டு இருந்தேன்” : பட விழாவில் கலங்கிய புகழ்

முகநூல் நேரலையில் சிவசேனா கட்சி தலைவரின் மகன் சுட்டுக் கொலை!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: பொட்டு… உங்களுக்கு ஏற்றது எது?

Why did CSK become the team’s new sponsor

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share