அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என்று சாம்சங் நிறுவனத்தினர் கூறியிருப்பதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிஐடியு தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல் துறையினர் நேற்று நள்ளிரவு அதிரடியாக கைது செய்தனர். போராட்டத்திற்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலும் அகற்றப்பட்டது.
இந்தநிலையில் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (அக்டோபர் 9) சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சாம்சங் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். அதற்கென சில கட்டுப்பாடுகள் இருக்கிறது. சாம்சங் தொழிலாளர்களின் ஒரு கோரிக்கை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
ஒருமாதமாக அவர்கள் போராடி வரும் நிலையில் முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் இயக்கம் சார்ந்த தொழிற்சங்கம் வைக்க அனுமதி இல்லை என அந்நிறுவனம் தரப்பில் கூறியுள்ளனர்” என தெரிவித்தார்.
முன்னதாக சாம்சங் ஊழியர்கள் போராட்டம் நடத்த தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா