ஏப்ரல் 1-ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் தங்களுக்கு நெருக்கமான நண்பர்கள், உறவினர்களிடம் பிராங்க் செய்வார்கள். இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், ஆபிஸ் செல்பவர்கள் இன்று யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது என்று மிகவும் மிகவும் உஷாராக இருப்பார்கள். april fool is celebrated
சரி… இந்த முட்டாள்கள் தினம் எப்படி உருவானது?
முட்டாள்கள் தினம் எப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. இருப்பினும் ஒரு சில நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்ட வரலாறுகள் உள்ளது.

1500 காலகட்டத்தில் ஐரோப்பியர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதி மீன் பிடிக்கும் வழக்கத்தை பின்பற்றியுள்ளனர். அந்தநேரத்தில் பிரான்ஸில் உள்ள ஆறுகள், நீரோடைகளில் அதிகளவில் மீன்கள் பிடிபடும். மீன்கள் ஏமாறும் நாளாக ஏப்ரல் 1-ஆம் தேதி கருதப்பட்டது. காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் நாளாக முட்டாள் தினம் மாறியது.
ரோமானியான திருவிழாவான ஹிலாரியா கொண்டாட்டத்தை மக்கள் முட்டாள் தினமாக கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் மாறுவேடம் அணிந்து ஒருவருக்கொருவர் கேலி செய்து ஏமாற்றி விளையாடுகிறார்கள்.
உலக ‘முட்டாள் தினம்’ இன்று கொண்டாடப்படும் நிலையில், நெருங்கியவர்கள், நண்பர்களை மிகவும் பதட்டத்திற்கு உள்ளாக்கும் வகையிலோ, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலோ ‘ஏப்ரல் ஃபூல்’ செய்து இந்த நாளை கொண்டாடுங்கள். april fool is celebrated
