ராஜேஷ் கன்னாவுக்கும் அக்ஷய் குமாருக்கும் என்ன தொடர்பு தெரியுமா? குரங்குகளுக்கு 1 கோடி வழங்கிய பின்னணி

Published On:

| By Kumaresan M

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியிலுள்ள குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வ அமைப்பிற்கு ரூ. 1 கோடியை அக்ஷய் குமார் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஆஞ்சநேயா சேவா தொண்டு நிறுவனத்தின் தலைவர் பிரியா குப்தா, “நாங்கள் குரங்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், அவைகளால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் சில கவனமான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.  நடிகர் அக்ஷய் குமார் பரந்த மனம் கொண்டவர். அவர் பெருந்தன்மையுடன் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் அக்ஷய்குமார் தனது பெற்றோர் மற்றும் மாமனார் ராஜேஷ் கன்னா ஆகியோர் நினைவாக இந்த நன்கொடையை வழங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால், குரங்குகளுக்கு உணவளிக்கும் வேன்களில் ராஜேஷ் கன்னா மற்றும் அக்ஷயின் தந்தை ஹரிஓம் பாட்டியா, தாய் அருணா பாட்டியாவின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.

நடிகர் ராஜேஷ் கன்னாவின் மகள் ட்விங்கிள் கன்னாவை நடிகர் அக்ஷய்குமார் காதலித்து மணந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அயோத்தியில் ராமர் கோவிலை சுற்றிலும்  ஆயிரக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. குரங்குகள் ராம பக்தனான அனுமனின் அவதாரங்களாக  கருதப்படுகின்றன. ராமர் தன் மனைவி சீதாவை  இலங்கையில் இருந்து  மீட்க நடத்திய போரில்  அனுமன் முக்கிய பங்காற்றியது அனைவருக்கும் தெரியும். இதனால், அயோத்தி கோவிலில்  குரங்குகள் ராமர் கோவிலுக்குள் தாராளமாக வலம் வரும். ராமர் கோவிலில் பால ராமர் சிலை இருக்கும் பகுதிக்கு குரங்குகள்  சென்றால், அனுமர் ராமரை சென்று சந்தித்து விட்டு வருவதாக பக்தர்கள் கருதுவது வழக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ‘அமரன்’ படகுழுவினரை வாழ்த்திய முதலமைச்சர் ஸ்டாலின்

60,000 நெருங்கிய தங்கம் விலை….இதற்கு ஒரு எண்டே இல்லையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share